சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி ஆணைய கூட்டம்: மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு.. எடியூரப்பாவுக்கு கண்டனம்!

Google Oneindia Tamil News

சென்னை : மேகதாது அணை கட்டுவோம் என கூறிய கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது.

இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்த விதிகளை மீறி கர்நாடக அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கருக்கலைப்பு புகார்.. சிக்கலில் மாஜி அமைச்சர் மணிகண்டன்.. நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி கருக்கலைப்பு புகார்.. சிக்கலில் மாஜி அமைச்சர் மணிகண்டன்.. நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி

மேகதாது திட்டம்

மேகதாது திட்டம்

பெங்களுரு நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே மேகதாது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் விடாப்பிடியாக கூறினார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு ஒருசேர எதிர்ப்பு தெரிவித்தன.

காவிரி மேலாண்மை கூட்டம்

காவிரி மேலாண்மை கூட்டம்

மேலும், மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இது இரு மாநில நல்லுறவுக்கும் உகந்தது அல்ல என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு எதிர்ப்பு

தமிழ்நாடு எதிர்ப்பு

கர்நாடக சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். காவிரியில் மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதற்கு கூட்டத்தில் தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கருத்து கடும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

எங்கள் அனுமதி வேண்டும்

எங்கள் அனுமதி வேண்டும்

மேகதாது மட்டுமின்றி காவிரியின் குறுக்கே எந்த இடத்தில் அணை கட்டினாலும் எங்களின் அனுமதி தேவை என்று தமிழ்நாடு பிரதிநிதி அழுத்தமாக கூறினார்.இதேபோல் அவசரம் கருதி திறக்கப்படும் உபரிநீரை தமிழ்நாட்டுக்கான நீர் பங்காக கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தமிழ்நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

 கர்நாடகா கூறியது என்ன?

கர்நாடகா கூறியது என்ன?

அப்போது மேகதாது அணை திட்டம் பெங்களூரு குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்று கூறி கர்நாடக தரப்பு உறுப்பினர்கள் மேகதாது அணை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதற்கு தமிழ்நாடு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

English summary
The Tamil Nadu government protested at a meeting of the Cauvery Management Commission against Karnataka Chief Minister Eduyurappa, who said he would build the Mekedatu dam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X