நீட் அச்சத்தால் 15 மாணவர்கள் மரணம்.. தமிழக அரசே முழுக்காரணம்.. முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு!
xசென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 15 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுதான் காரணம். நீட் மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.
திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடக்கிறது. திமுகவில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர், துணை பொதுச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் நடக்கும் இந்த முப்பெரும் விழா அதிக கவனம் பெற்றுள்ளது.
செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்று முக்கியமான நாட்களை கொண்டாடும் வகையில் திமுக சார்பாக முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விழா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இன்று விழா
இந்த நிலையில் திமுகவின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 7 மாதங்களில் திமுக ஆட்சி என நாடே சொல்கிறது. மக்கள் திமுக ஆட்சி வரும் என்று நம்புகிறார்கள். திமுக ஆட்சிதானா? என ஊடகங்கள் விவாதம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை- மக்கள் மனம் அது.மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.

கொரோனா எப்படி
கொரோனாவால் ஒரு உயிர் கூட போகாது என்ற சொன்னவர் முதல்வர்.. ஆனால் 8,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 3 நாட்களில் சரியாகிவிடும், 10 நாட்களில் சரியாகிவிடும் என சொன்னவர்கள் கடவுள் பார்த்துக்குவார் என்றனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.

லட்சணம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சம் என்பதுதான் அதை தடுக்கும் லட்சணமா?.தமிழக அரசு வெளியிட்ட கொரோனா புள்ளி விவரங்களிலாவது உண்மையா? அதிலும் பொய்கள். கொரோனாவை விட கொடிய ஊழலரசு கோட்டையில் இருக்கிறது- அதை விரட்ட வேண்டாமா?. கொரோனா குறித்து தமிழகம் அடுத்தடுத்து பல பொய்களை சொல்லி வருகிறது.

மூடி மறைக்கிறது
மக்களிடம் அரசு உண்மைகளை மூடி மறைக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 15 மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுதான் காரணம். நீட் மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நீக்கப்படும். மொத்தமாக தமிழகத்தில் 8 மாதத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications