தீபாவளி பண்டிகை.. இனிப்பு, காரம் தயாரிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்.. விதியை மீறினால் ஆக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு, காரங்களைப் பகிர்ந்து கொண்டாடுவது வழக்கம். பண்டிகை காலங்களில் இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான இனிப்புகள், பலகாரங்கள், கார வகைள் உள்ளிட்டவற்றை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொது மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TN Govt Issues Guidelines for Sweets and Savouries Sellers Ahead of Diwali

இனிப்பு, கார வகைகள், பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களை கொண்டு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தரமான முறையில் கலப்படமில்லாது தயாரித்து பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

உணவு பொருட்களை கையாள்பவர்கள் வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகைப்பிடித்தல், எச்சில் உமிழ்தல் போன்ற செயல்பாடுகளை உணவு தயாரிக்கும் வளாகத்தில் அனுமதிக்க கூடாது.

பணியாளர்கள் மற்றும் உணவை கையாளுபவர்கள் கண்டிப்பாக தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச் சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிடவேண்டும்.

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள், கிருமி தொற்றுஇல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து விற்பனை செய்திடல் வேண்டும். உணவுப் பொருட்களை செய்தி தாளில் மடித்து தரக்கூடாது.

இனிப்பு காரம் தயாரிப்புக்கு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தரமான எண்ணெய் / நெய் பயன்படுத்த வேண்டும்.

உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெறாமல் உணவு வணிகத்தில் ஈடுபடுவது குற்றம் பால் பொருட்களில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளும், பால் அல்லாத இனிப்பு பொருட்களில் தனித்தனியே பொட்டலமிட வேண்டும்.

உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸப் எண்ணில் தெரிவிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+