கைகட்டி வேலை பார்க்க வேண்டாம்! கடைய போடுங்க.. காசை அள்ளுங்க! தமிழ்நாடு அரசு தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் இளைஞர்கள் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சாட் ஜிபிடி பயிற்சி, இணையதளத்தை உருவாக்குதல் மற்றும் பல்வேறு தொழில்கள் குறித்து பயிற்சியோடு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னையில் தினை வகைகளை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி 4 நாட்கள் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட ஆண்கள், பெண்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில், 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 21.07.2025 முதல் 24.07.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களின் ராகி நெய் குக்கீகள், சத்துமாவு குக்கீகள், கோதுமை தேங்காய் குக்கீகள், முத்து சோக்கோ தினை குக்கீகள் (கம்பு). கோடோ முந்திரி தினை குக்கீகள் (வரகு), சிறிய முந்திரி தினை குக்கீகள் (சாமை), சோளம் பிஸ்தா குக்கீகள் (சோலம்), பர்னார்ட் ஜீரா குக்கீகள் (குதிரைவாளி), மசாலா குக்கீகள், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி, ராகி சாக்கோ ரொட்டி, ராகி பிரவுனி, குதிரைவாலி தினை பிரவுனி, கருப்புகோவ்னி தினை பிரவுனி, பல தினை வால்நட் பிரவுனி, டேட்ஸ் தினை பிரவுனி, கோதுமை பிளம் கேக், ராகி சாக்லேட் கேக், ஜோவர் கேரட் கேக் (Cholam cake), ஃபாக்ஸ்டெயில் மற்றும் டேட்ஸ் கேக் (தினை), வாழைப்பழம் வால்நட் கேக், தினை வெல்லம் வெண்ணெய் கேக், முழு கோதுமை பீட்சா, முழு கோதுமை பூண்டு ரொட்டி, ராகி கருப்பு காடு கேக், பட்டர்கிரீம் ஃப்ரோஸ்டிங்குடன் தினை வெண்ணிலா கேக் வகைகள் எப்படி தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள். மேலும் தயாரிப்பு சந்தைப்படுத்துதலின் அம்சங்கள் பேக்கிங் லேபிளிங் மற்றும் அதற்கான விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள் - தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல். சென்னை 600 032. 8668102600 / 7010143022. முன்பதிவு அவசியம்:
அரசு சான்றிதழ் வழங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
ஹாஸ்டலாக மாறும் வீடுகள்.. கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு! தமிழக அரசு கொடுத்த சூப்பர் சான்ஸ் -
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு? -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
மூக்கில் ஆபரேஷன் செய்ய போய் உயிரிழந்த சீதாலட்சுமி! அரசு தந்த இலவச வீட்டு மனை பட்டா! நெகிழ்ந்த சகோதரி -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications