தமிழக வக்பு வாரியத்துக்கு விரைவில் தலைவர்... இஸ்லாமியர்கள் மனம் குளிரும் அறிவிப்புகள்
Recommended Video
சென்னை: தமிழக வக்பு வாரியத்துக்கு பல மாதங்களாக தலைவர் இல்லாமல் இருந்துவருவதால், புதிய தலைவரை நியமிப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
குடியுரிமை சட்டம் விவகாரத்தில் ஏற்கனவே இஸ்லாமியர்கள் அதிமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளதாக கருதப்படும் நிலையில், அவர்களின் மனம் குளிரும் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் அதன் முதற்கட்டமாக, ஹஜ் பயணிகள் தங்குவதற்காக சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும், உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.1500 லிருந்து ரூ.3,000 ஆக அதிகரிக்கப்படும், உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50 % மானியம் வழங்கப்படும் என ஏராளமான அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், தமிழக அரசை விமர்சித்தும் போராட்டம் நடத்திவிட்டு இல்லத்திற்கு சென்ற இஸ்லாமியர்களுக்கு தொலைக்காட்சியில் முதல்வரின் அறிவிப்பை பார்த்து திகைப்பு ஏற்பட்டது. நாயகன் படத்தில் வரும் நீங்கள் நல்லவரா..கெட்டவரா என்ற வசனம் தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டத்தை முதல்வர் கொச்சைப்படுத்தி விட்டதாக கூறப்பட்ட நிலையில், இஸ்லாமிய மக்களின் மனதை கவரும் வகையில் இன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை உள்ளடக்கிய வக்பு வாரியத்துக்கு தலைவரை நியமிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் நேற்று கூட சட்டப்பேரவையில் முதல்வரை வலியுறுத்தினார். ஏற்கனவே இது தொடர்பான கோரிக்கையை அதிமுகவில் உள்ள சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளே முதல்வரிடம் தெரிவித்திருந்தனர். இதனிடையே மீண்டும் முகமது ஜான் எம்.பி.யை வக்பு வாரியத் தலைவராக நியமிப்பது பற்றி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தோ அல்லது அதற்குள்ளோ இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications