Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு வந்த அதானி யார் யாரை சந்தித்தார்? RTI கேள்விக்கு தமிழக அரசு அளித்த பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஜூலை மாதம் சென்னை வந்த கௌதம் அதானி யார் யாரை சந்தித்தார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை பதில் அளித்துள்ளது. சென்னை வந்த அதானி எந்தெந்த பொது ஊழியரைச் சந்தித்தார் என்ற எந்த தகவலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். அதற்காக தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரியங்களுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.

adani tamil nadu rti

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: இதையடுத்து, கடந்த ஜூலை 10 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த அதானி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சந்திப்பு குறித்து எந்த புகைப்படமும், தகவலும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை என்றும், அதானியை சந்தித்தது ஏன் என முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்க்கட்சிகள் வலியுறுத்தின.

அண்மையில் சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. நான் அதானியை சந்திக்கவில்லை. அதானி விவகாரத்தை அரசியலாக்கி வருவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ஆர்டிஐ கேள்விக்கு பதில்: இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் சென்னை வந்த கௌதம் அதானி தமிழ்நாட்டில் எந்தெந்த பொது ஊழியர்களைச் சந்தித்தார் என அறப்போர் இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை பதில் அளித்துள்ளது. சென்னை வந்த அதானி எந்தெந்த பொது ஊழியரைச் சந்தித்தார் என்ற எந்த தகவலும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம்: இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி உள்ளது என்ற செய்தி வெளிவந்து ஒரு சில நாட்களிலேயே கௌதம் அதானி ஜூலை 2024 இல் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவர் சென்னையில் எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார், அதில் என்ன பேசப்பட்டது, லஞ்ச ஒழிப்புத்துறை இன்று வரை ஏன் முதல் தகவல் அறிக்கை கூட இந்த புகாரில் பதிவு செய்யவில்லை என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்துள்ளது.

கௌதம் அதானி கடந்த ஜூலை மாதம் சென்னை வந்தபோது எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார் என்ற விவரமும் அந்த சந்திப்புகளின் காரணம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக அறப்போர் இயக்கம் தமிழ்நாட்டின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையிடம் கேட்டிருந்தோம். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அவர்களிடம் இது குறித்து எந்த தகவலும் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதிலில் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மிகப்பெரிய தொழிலதிபர்களும் மற்றவர்களும் வந்து இங்கு அரசாங்கத்தில் இருப்பவர்களை சந்திக்கும் பொழுது அது குறித்த புகைப்படங்களை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் கௌதம் அதானி எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார் என்பது குறித்தான தகவல்களே தங்களிடம் இல்லை என்பது மிக ஆச்சரியமாக உள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கே தெரியாத அளவில் கௌதம் அதானியின் சந்திப்புகள் ரகசியமாக நடந்துள்ளதா? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கௌதம் அதானி தமிழ்நாட்டில் எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார் மற்றும் அந்த சந்திப்புகளில் எது குறித்து பேசப்பட்டது என்பதற்கான விளக்கத்தினை தெளிவாக வழங்கிட வேண்டும்.

போராட்டம்: ஒருவேளை அவர் எந்த பொது ஊழியரையும் சந்திக்கவில்லை என்றால் அதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராய் இருந்த முக ஸ்டாலின் அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது சிபிஐ விசாரணை கோரியதும் ஆளுநரை சந்தித்து லஞ்ச ஒழிப்புத்துறை இதன் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டுவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டு காலத்தில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு FIR கூட பதிவு செய்யாதது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

கௌதம் அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழல், சோலார் லஞ்ச ஊழல் உள்பட இந்தியா முழுவதும் அதானியின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள பல்வேறு ஊழல்களின் மீது மத்திய மாநில அரசுகள் FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டி அழுத்தம் கொடுப்பதற்காக அறப்போர் இயக்கம் ஜனவரி 5ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் காலை போராட்டம் நடத்த உள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+