குறைந்த விலையில் தக்காளி வாங்கனுமா.. ரேசன் கடை போங்க! இன்று முதல் 300 இடங்களில் அரசு விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து இருக்கும் நிலையில் தமிழ்நாடு மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு இன்று முதல் 300 ரேசன் கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது.

கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. குறிப்பாக சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை ரூ.100 ஐ தாண்டி விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை தினமும் உயர்ந்து வருவதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

TN Govt sale Tomato at low cost in 300 resan shops in Tamilnadu

அதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. சென்னை, மதுரையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. மொத்த விற்பனை ரூ.200 க்கும் அதிகமான விலையில் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காய்கறிகளின் வரத்து குறைந்து இருப்பதால் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்து இருக்கின்றனர். இன்று காலை கடைகளுக்கும், சந்தைக்கும் காய்கறி வாங்க செல்லும் சாமானிய மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

காய்கறிகளின் விலையை கேட்டு அவர்கள் திகைத்துப்போய் உள்ளனர். உணவுக்கு வெங்காயம், தக்காளி போல் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்து உள்ளது.

இந்த நிலையில்தான் தக்காளி விலை உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு அசத்தல் திட்டத்தை அறிவித்தது. ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்கப்படும் என்ற அறிவிப்புதான் அது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள 85 ரேசன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் மக்கள் நலன் கருதி இன்று முதல் தமிழ்நாட்டின் 300 ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+