செந்தில் பாலாஜிக்கு செக் மேட்.. குற்ற வழக்கு தொடர ஆளுநர் ரவி அனுமதி.. தமிழக அரசு அனுப்பிய பதில்!
சென்னை: செந்தில் பாலாஜி மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி அளித்ததாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், செந்தில் பாலாஜி மீதான வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்காமல் உள்ளனர். அதோடு அவருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்.

ஆனால் தமிழக அரசு வழக்கு பதியாமல் உள்ளது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்குகளில் ஆளுநர் ரவி இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அவர் அனுமதி அளித்தால் விசாரணை செய்ய முடியும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதை பற்றிய ஆவணங்களை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு: இதே அமர்வில் செந்தில் பாலாஜிக்கு விரைவில் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. PMLA வழக்குகளில் ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜார்காண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடன் சேர்ந்து பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் கைதான பிரேம் பிரகாஷ் என்பருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதாவது PMLA வழக்கு என்பது சிறப்பு வழக்கு கிடையாது . எந்த வழக்காக இருந்தாலும்.. ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்பதே விதி. அதை இதிலும் பின்பற்றலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர். இது மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிலும் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதானவழக்கில் இதுவரை வைக்கப்பட்ட வாதங்கள் கவனம் பெறுகின்றன. இந்த வழக்கில் வாதங்கள் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளன. கடந்த வாரம் இந்த வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்.. விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள்: இதுவரை இந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
1. பிஎம்எல்ஏ சட்ட பிரிவில் ஜாமீன் வழங்கப்பட கூடாது என்று விதி இல்லை. ஜாமீன்.. என்பது பிஎம்எல்ஏ வழக்கில் கொடுக்கப்பட வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்டது. இதையேதான் உச்ச நீதிமன்றமும் கூறி உள்ளது.
2. முதலில் அமலாக்கத்துறை இதில் மிகவும் தாமதமாக ஆவணங்களை கொடுத்தது. உதாரணமாக கடந்த மே 6ம் தேதி விசாரணையின் போது அமலாக்த்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. அன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அன்றுதான் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அமலாகக்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் influential person-ஆக உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதால் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது., விசாரணையின்போது செந்தில்பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை, என்று கூறியது.
3. இதற்கு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த பதிலில், 320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன் ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது, என்று செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார்.
4. இதையடுத்து அமலாக்கத்துறை அளித்த பதிலில்.. நாங்கள் இந்த வழக்கில் தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வேண்டும் என்றே நாங்கள் தாமதம் செய்யவில்லை, என்று அமலாக்கத்துறை கூறியது . தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.. இதனால் நீதிபதிகள் பதில் மனுவை படிக்க கூட முடியவில்லை. இதனால் அப்போது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
5. செந்தில் பாலாஜி: செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை. அதனால் அவருக்கு இடைக்கலஜா ஜாமீன் வழங்க வேண்டும். மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications