புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தவில்லை- மாநில கல்வி கொள்கைக்கு விரைவில் குழு: அமைச்சர் பொன்முடி
சென்னை: தமிழகத்தின் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவில்லை; தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் கல்வியாளர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்தது தொடர்பான காரணங்களை விவாதிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை மீண்டும் உயர்த்துவது குறித்து கல்லூரி முதல்வர்கள், துறைகளின் தலைவர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கும் தமிழக அரசு செயல்படுத்தும் கல்விக் கொள்கைக்கும் தொடர்பு கிடையாது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சில திட்டங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கலாம்.மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான குறைகள் உள்ளன. அதனால்தான் மாநில கல்வித் திட்டம் தேவை என்று வலியுறுத்தி வருகிறோம். மாநிலத்துக்கான தனி கல்விக் கொள்கையை உருவாக்க விரைவில் குழு அமைக்கப்படும்.
இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது தமிழக முதல்வரின் திட்டமாகும். அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறைதான். இதற்கும் புதிய கல்வி கொள்கைக்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications