மாதிரி ஆவணப் பதிவு மையங்களில் பத்திரம் பதிவு செய்ய தட்கல் பிரீமியம் கட்டணம் ரூ.10 ஆயிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை வடக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு மற்றும் கோவை வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் மாதிரி ஆவணப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மாதிரி ஆவணப் பதிவு மையங்களில் பத்திரம் பதிவு செய்ய தட்கல் பிரீமியம் கட்டணம் ரூ.10 ஆயிரம் என அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. வழக்கமான சேவை மற்றும் தட்கல் வழக்கமான சேவைகளில் வசூலிக்கப்படும் தொகையில் 80 சதவீதம் அரசுக்கும், 20 சதவீதம் தனியாருக்கும் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக 5 இடங்களில் மாதிரி ஆவணப் பதிவு மையங்களை அமைக்க ரூ.7 கோடியே 84 லட்சத்து 15 ஆயிரத்து 236 நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:- தற்போது சொத்து ஆவணப் பதிவு மற்றும் திருமணப் பதிவு ஆகியவை தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

deed registration tamil nadu


மாதிரி ஆவணப் பதிவு மையங்கள்

இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், ஒரு பதிவு மாவட்டத்துக்குள் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான மாதிரி ஆவணப் பதிவு மையத்தில் ஆவணங்களைப் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக சென்னை வடக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு மற்றும் கோவை வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் மாதிரி ஆவணப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, மேலும் 20 இடங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த மையங்களை அமைத்தல், தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளுக்காகத் தனியார் சேவை வழங்குனர் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கான ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.


தட்கல் பிரீமியம் சேவை

இந்த புதிய மாதிரி ஆவணப் பதிவு மையங்களில் வழக்கமான சேவை, தட்கல் வழக்கமான சேவை, பிரீமியம் சேவை, தட்கல் பிரீமியம் சேவை என 4 வகையான சேவைகளுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த மையத்தில் ஒரு ஆவணம் அல்லது திருமணப் பதிவுக்கு வழக்கமான சேவைக்கு ரூ.2,000-ம், தட்கல் வழக்கமான சேவைக்கு ரூ.5 ஆயிரமும், பிரீமியம் சேவைக்கு ரூ.5 ஆயிரமும், தட்கல் பிரீமியம் சேவைக்கு ரூ.10,000 ஆயிரமும் கட்டணம் ஆகும். இந்த கட்டணம், மாதிரி ஆவணப் பதிவு மையங்களில் சேவை வழங்குவதற்கான வசதிக் கட்டணங்கள் மட்டுமே. இதனுடன் பொருந்தக்கூடிய முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களையும் பொதுமக்கள் எப்போதும் போல் செலுத்த வேண்டும்.

தனியாருக்கு 50 சதவீதம்

இந்த புதிய மையங்களில் வசூலிக்கப்படும் வசதிக் கட்டண வருவாயை அரசு மற்றும் மையங்களை இயக்கும் தனியார் இடையே பகிரப்படும். அதன்படி வழக்கமான சேவை மற்றும் தட்கல் வழக்கமான சேவைகளில் வசூலிக்கப்படும் தொகையில் 80 சதவீதம் அரசுக்கும், 20 சதவீதம் தனியாருக்கும், பிரீமியம் சேவையில் அரசுக்கும்- தனியாருக்கும் தலா 50 சதவீதம் பகிரப்படும். தட்கல் பிரீமியம் சேவையில் 65 சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியாருக்கும் பகிரப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+