சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமியார் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார், மாமியார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருப்பவர் ஜே ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். இவர் தான் சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் தீவிர களப்பணியாற்றி வந்தார்.

சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு பணிகளை செய்தார். கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டார். இதையடுத்தே அவர் மீண்டும் தமிழக சுகாதாரத் துறை செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்..
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மாமனார், மாமியார் உள்ளிட்டோருக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
மாமனார், மாமியாருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, தனது குடும்பத்தினருடன் ராதாகிருஷ்ணன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் ராதாகிருஷ்ணனின் மனைவி மற்றும் மகனுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதியான நிலையில் குடும்பத்தினர் நான்கு பேரும் கிண்டியில் உள்ள கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலை ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தனது டுவிட்டரில் கேள்விக்கு ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். இதனிடையே, குடும்பத்தினர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழக சுகாதாரத் துறை செயலாளர் குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications