உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு.. பாஜக 2 மேயர் பதவி கேட்கிறது.. போட்டுடைத்த அமைச்சர் ஜெயக்குமார்!
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இரண்டு மேயர் இடங்கள் கேட்கிறது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இரண்டு மேயர் இடங்கள் கேட்கிறது என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.
இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம்.

மழை பெய்கிறது
இந்த நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பேட்டி அளித்தார். அதில், தமிழகத்தில் கன மழை பெய்தால், அதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு குறித்தும், புயல் சின்னம் குறித்தும் உடனுக்குடன் அறிவிக்கப்படும். மீனவர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும்.

2 மேயர் பதவி
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 2 மேயர் இடங்களை பாஜக கேட்டுள்ளது. இரண்டு முக்கிய மாநகரங்களில் மேயர் பதவியை பாஜக கேட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நான் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது.

முடிவு
கட்சியினர் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். இதுபற்றி இறுதி முடிவை கட்சி தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும்.தேர்தல் அறிவித்த பின் பெரும்பாலும் எங்கள் முடிவை நாங்கள் தெரிவிப்போம். உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கேள்வி
உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் ரெடியாகி வருவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. பாஜக எந்த இடங்களில் மேயர் பொறுப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு இதனால் அதிகமாகி இருக்கிறது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications