கோவையில் வன்முறையை ஏற்படுத்தவே அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தார்கள்-எடப்பாடி பழனிச்சாமி புகார்
சென்னை: கோவையில் வன்முறையை ஏற்படுத்தவே அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டிருக்கிறார் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், கோயமுத்தூர் மாநகராட்சியில், கலவரம் ஏற்பட ரவுடிகள் இறக்கப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதனால் கோயமுத்தூருக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டிருந்தார். நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்று இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டார்.

நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ''கோவை மாநகராட்சி தேர்தலில் வன்முறையை ஏற்படுத்தி, மக்களை அச்சுறுத்தி ஜனநாயக முறைப்படி வாக்களிக்காமல் தடுப்பதற்காக திமுக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின், அமைச்சர் திரு.செந்தில் பாலாஜியை நியமித்து அவர் இந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது
குண்டர்களையும்,ரவுடிகளையும் வெளியேற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர், சட்டமன்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை ஆணையர் இடத்திலும் புகார் அளித்தார்கள் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாகவும், மாவட்ட காவல்துறை ஏவல் துறையாகவும் செயல்படுவதை கண்டிப்பதுடன்,
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் தொடர்ந்து துணை ராணுவத்தை கேட்டுவரும் நிலையில், தமிழகத்துக்கு துணை ராணுவம் தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதோடு தமிழகத்தில் நாளைய தேர்தலுக்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கோவையில் தங்கியிருந்த வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏற்கெனவே புறப்பட்டுவிட்டதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை நடக்கும் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications