வீறுநடை போடும் இளைஞர் படை.. தேர்தலில் சாதித்துக் காட்டிய இளம் தலைமுறை!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு இளம் தலைமுறையினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கும் கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
இந்த தேர்தலில் இளம் தலைமுறையினர், கல்லூரி மாணவ மாணவிகள் என பல இளைஞர்கள் போட்டியிட்டனர். அவர்களில் பலர் தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.

இளம் வேட்பாளர்
திமுக சார்பில் போட்டியிட்ட 21 வயது இளம் வேட்பாளரான கல்லூரி மாணவி ரேவதி ஆரணியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஓசூர் மாநகராட்சி 13 வது வார்டில், திமுக வேட்பாளராக களமிறங்கிய 3ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி 22 வயதான யஷாஸ்வினி, அபார வெற்றி பெற்று உள்ளார். இவர், மொத்தமாக 1146 வாக்குகள் பெற்று உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 640 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

நிலவரசி
சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள 136 வது வார்டில் 22 வயது பி.காம் பட்டதாரி நிலவரசி துரைராஜ், இந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். சென்னை மாநகராட்சியில் 22 வயதில் கவுன்சிலரான இளம் பெண் இவர்தான். ''திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தான் எனது அரசியல் ரோல்மாடல்'' என நிலவரசு துரைராஜ் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருச்சி
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய 22 வயது இளம் பொறியியல் பட்டதாரியான சினேகா, என்ற மாணவி அமோகமான முறையில் வென்று உள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி 17 வது வார்டில் திமுக வேட்பாளரான இளம் பெண், 4000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உள்ளார். நாகர்கோவில் மாநகராட்சியின் 17ஆவது வார்டு உறுப்பினராக 21 வயது பட்டதாரி இளம்பெண் கெளசுகி வெற்றி பெற்றுள்ளார்.

பரிதி இளம்சுருதி
சென்னை மாநகராட்சியில் எழும்பூர் 99வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரிதி இளம் சுருதி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அ.தி.மு.க ஆதரவுடன் போட்டியிட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் சிவகாமி படுதோல்வியடைந்துள்ளார். மேலும் மதுரை 79வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க இளம்பெண் வேட்பாளர் லக்ஷிகா ஶ்ரீ அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் கொடைக்கானல் 7வது வார்டில் போட்டியிட்ட பிரபா ஷாமிலி ஜீவா வெற்றி பெற்றுள்ளார்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications