அடப்பாவமே.. தொலைந்து போன சாவிகள்... உடைக்கப்பட்ட பூட்டுக்கள்.. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பரபரப்பு
சென்னையில் 175 வது வார்டு தபால் வாக்கு பெட்டி சாவி இல்லாததால் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டு உடைத்து திறக்கப்பட்டது.
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. சென்னையில் 175 வது வார்டு தபால் வாக்கு பெட்டி சாவி இல்லாததால் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டு உடைத்து திறக்கப்பட்டது. கடலூரில் ஸ்ட்ராங் ரூம் சாவி மாயம் பூட்டு அறுக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் எடுத்தச்செல்லப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. கொரனா பரவல் காலம் என்பதால் அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தபால் வாக்குகள்
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. யாருக்கு வாக்கு என்பதை வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்த பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தபால் வாக்குகள் முடிந்த பிறகு ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்து வரப்படும்

தபால் வாக்குப்பெட்டி சாவி
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் நடைபெற்ற வாக்குகள் அனைத்தும் மண்டத்திற்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தமாக 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. 175-வது வார்டு தபால் வாக்கு பெட்டி சாவி இல்லாததால் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டு உடைத்து திறக்கப்பட்டது. சாவியை தொலைத்தவர்கள் யார் என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

கடலூர் ஸ்ட்ராங்க் ரூம் சாவி
இதே போல கடலூர் நகராட்சியில் ஸ்ட்ராங் ரூம் சாவி மாயமானதால் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமானது. இதனையடுத்து ஸ்ட்ராங் ரூமின் பூட்டு அறுக்கப்பட்டு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன. சாவியை தொலைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை பாயப்போகிறது என்று தெரியவில்லை.

வேடிக்கை சுவாரஸ்யங்கள்
காலையில் தபால் வாக்குகள் எண்ணப்படும் போதே பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. இன்னும் சில மணி நேரங்களில் வார்டுகள் வாரியாக வெற்றி நிலவரம் அறிவிக்கப்படும் என்பதால் இன்னும் பல வேடிக்கையான சம்பவங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications