Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து பெண்களைவிட இஸ்லாமிய பெண்கள் அதிகமாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாக மோடி பேசியதில் உண்மை இல்லை என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இஸ்லாமியர்களை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இவரின் பேச்சு உள்நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

TN Lok Sabha Election 2024 Are Muslim women having more children

மேலும் பிரதமர் மோடியின் பேச்சு உண்மையல்ல என்று பலரும் புள்ளிவிவரங்களுடன் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாதிரியான பொய் பிரச்சாரம் பற்றி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எழுத்தாளர் அ.மார்க்ஸ், 'இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்டுக்கதைகள்' என்று ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் இஸ்லாமியர்கள் தொடர்பாக தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் வதந்திகளுக்கான உண்மையான ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் புத்தகத்தில் அ.மார்க்சிடம் இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. எனவே அவர்கள் மத்தியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்கள் தானே? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் தொடர்பான கட்டுக்கதை 1:

அதற்கு அவர் மிக விரிவான வரலாற்று உண்மையை எடுத்து கூறியிருந்தார்.

இந்து மதத்தை சார்ந்த வலதுசாரிகள் சிலர் இந்தக் கருத்துக்கு ஆதரவாக 1981ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் காட்டுவார்கள். அதாவது முஸ்லிம்களின் எண்ணிக்கை 61 மில்லியனிலிருந்து 75 மில்லியனாக உயர்துள்ளது (30.69% அதிகரிப்பு) என்பார்கள்.

ஆனால், அதே சமயத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 453 மில்லியனிலிருந்து 549 மில்லியனாக உயர்ந்துள்ளது (24.14% அதிகரிப்பு).

இந்தப் புள்ளி விவரத்தை மட்டும் பார்க்கும்போது அவர்கள் சொல்வது உண்மை போலத் தோன்றும். முழுமையாக இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள கீழேயுள்ள தகவலைப் பாருங்கள்.

மக்கள் தொகை வளர்ச்சி (எண்கள் சதவீதங்களைக் குறிக்கின்றன).

ஆண்டுகள் - இந்துக்கள் - இஸ்லாமியர்

1961-71 - 23.69 - 30.84

1971-81 - 24.14 - 30.69

TN Lok Sabha Election 2024 Are Muslim women having more children

இதன்படி பார்த்தால் முதல் பத்தாண்டுகளைக் காட்டிலும் அடுத்த பத்தாண்டில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதமோ குறைந்துள்ளது.

ஒன்றைப் புரிந்து கொள்வது நல்லது. மக்கள் தொகை வளர்ச்சி வீதம் என்பது மத உணர்வைப் பொறுத்ததல்ல. கல்வியறிவு, பொருளாதார வளர்ச்சி போன்ற இதர காரணிகளையே அது பொருத்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர் நிறுவியுள்ளனர்.

முஸ்லிம்கள் மத்தியில் கல்வி, பொருளாதார நிலைகள் என்பன இந்துக்களைக் காட்டிலும் குறைவு. முஸ்லிம்கள் மத்தியில் வறுமை இந்துக்களைக் காட்டிலும் 17 சதம் கூடுதல்.

பொதுவில் கல்வி வளர்ச்சி அதிகமாகும்போது குழந்தை பெறும் வீதம் குறைந்துவிடுகிறது. காஷ்மீரில் 75% முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் வீதம் 5.21.

மொத்தம் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களில் முஸ்லிம்களின் பங்கும் கிட்டத்தட்ட இதே அளவுதான் இருக்கிறது. எனவே முஸ்லிம் மக்கள் தொகை பெருகி வருகிறது என்பதும், இப்படியே போனால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவர் என்பதும் அப்பட்டமான பொய்கள்" என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.

மோடியின் பேச்சும் உண்மை நிலையும்:

உண்மை நிலை இவ்வாறு இருக்க, ராஜஸ்தான் பிரச்சார கூடத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்துக்களைவிட முஸ்லிம் பெண்கள் அதிகம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாக ஒரு வதந்தியை கூறியுள்ளார்.

உண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் என்ன சொல்கின்றன?

குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் விகிதாசாரத்தை பொறுத்தவரை இந்து பெண்களுக்கும் இஸ்லாமிய பெண்களுக்குமான இடையே உள்ள வேறுபாட்டின் அளவு மிகமிகக் குறைவாகவே இருக்கிறது என்கிறது..

1998 மற்றும் 99 இடையேயான ஆண்டுகளில் இந்து பெண்கள் மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கான குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதாசாரம் என்பது 0.81 ஆக இருப்பதாக மத்திய அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2019-21 ஆம் ஆண்டுகளில் இதே விகிதாசாரம் 0.42 ஆகவே இருக்கிறது.

TN Lok Sabha Election 2024 Are Muslim women having more children

அதாவது 1998-99 ஆண்டுகளுக்கான கணக்கெடுப்பின்படி இந்து பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான விகிதம் 2.78 ஆக உள்ளது. அதே ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் முஸ்லிம்களின் அளவு 3.59% ஆகவே இருந்துள்ளது. 2019-21 ஆம் ஆண்டுகளில் இந்து பெண்களின் விகிதம் 1.94 ஆகவும் இஸ்லாமிய பெண்களின் விகிதம் என்பது 2.56 ஆக உள்ளது.

வடமாநிலங்களின் நிலை என்ன?

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். அங்கே 2005 முதல் 2006 வரையிலான ஆண்டுகளில் இந்து பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதாசாரமானது 3.73 ஆகவும் முஸ்லிம் பெண்களின் விகிதாசாரம் 4.33 ஆகவுமே இருந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இதே காலகட்டத்தில் இந்துகளின் விகிதம் 2% ஆகவும் முஸ்லிம்களின் விகிதம் 2.85 ஆகவும் இருந்துள்ளது.

இதே பீகாரில் இந்து பெண்களின் விகிதம் 3.86 ஆகவும் முஸ்லிம் பெண்களின் அளவு 4.81 ஆகவும் இருந்துள்ளது.

அதே 2019 முதல் 2021 ஆம் ஆண்டுகளில் இந்துக்களின் விகிதாசாரமானது 2.29 ஆகவும் முஸ்லிம் பெண்களின் விகிதாசாரமானது 2.66 ஆகவும் இருந்துள்ளது.

TN Lok Sabha Election 2024 Are Muslim women having more children

பீகாரில் இதே ஆண்டில் இந்து பெண்களின் விகிதம் 2.88 ஆகவும் முஸ்லிம் பெண்களின் விகிதம் 3.63 ஆகவும் இருந்துள்ளது. மகாராஷ்டிராவில் இந்துகளின் நிலை 1.69% ஆகவும் முஸ்லிம்களின் நிலை 2.06% ஆகவுமே இருந்துள்ளது.

ஆக, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் என இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பல மாநிலங்களின் மோடி குறிப்பிட்டு சொல்லும் வேறுபாடு பெரிய அளவில் இல்லை. அது ஒரு கட்டுக்கதை என்றே அ.மார்க்ஸ் கூட முன்பே நூல் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வந்து பிரச்சாரத்தில் மோடி பேசிய பேச்சுகளில் உண்மை இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூட சுட்டிக்காட்டி இருந்தார். வாட்ஸ் அப் யூனிவர்சிடியில் வரும் தகவல்களைப் படித்து பேச வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+