‘அனுமான்’ பலத்தில் கெஜ்ரிவால்? ‘ராமர்’ பலத்தை இழந்த மோடி! உபி, மபி, ராஜஸ்தானில் மூழ்கிய பாஜக கப்பல்!
சென்னை: பாஜக பலமாக ஆட்சி செய்து வரும் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் அதிகப்படியான தொகுதிகளை அந்தக் கட்சி இந்தத் தேர்தலில் இழக்க நேரிடும் என ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது.
கெஜ்ரிவால் மீதான வழக்கில் முதல் தகவல் அறிக்கையானது 2022 ஆகஸ்டில் போடப்பட்டது. அதை சிபிஐதான் போட்டது. அதன்பின்னர் தான் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இந்த வழக்கைக் கையில் எடுத்தது.

கெஜ்ரிவால் வழக்கில் நடந்தது என்ன?
இந்த வழக்கில் ஆரம்பம் சிபிஐதான். அதன்பிறகுதான் இதன் உள்ளாக இ.டி வந்தது. அப்படிப் பார்த்தால் 2022 இல் தொடங்கப்பட்ட விசாரணையானது 2024 வரை நடைபெற்று வந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் தான் கைது செய்தது அமலாக்கத்துறை.
அதுவும் சரியாகத் தேர்தல் தொடங்க உள்ள ஒரு மாதத்திற்கு முன்னதாக கைது நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த வழக்கை எதிர்த்துத்தான் கெஜ்ரிவால் உயர்நீதி மன்றம் போனார்.
அதன்பின்னர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு நாள்கள் முன்னதாக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

அதாவது அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் சில விளக்கங்களைக் கேட்டிருந்தது. அதாவது முதல் தகவல் அறிக்கை 2022இல் போடப்பட்டுள்ளது. ஆனால், கைது நடவடிக்கை 2024 மார்ச் மாதம் நடந்துள்ளது. ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேட்டது.
அதற்குச் சரியான விளக்கம் அளிக்காத இ.டி. கடைசிக் கட்டத்தில், ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால், மீண்டும் கெஜ்ரிவால் அதன் மீதாகப் பதிலளிக்க அவகாசம் தர வேண்டும். அப்படி அவகாசம் கொடுத்தால், அதற்குத் தேர்தலே நடந்து முடிந்துவிடும். கெஜ்ரிவால் பிரச்சாரத்திற்குப் போகவே முடியாது.
இ.டி. தலையில் விழுந்த இடி!
மேலும் உச்சநீதிமன்றத்திற்கு மார்ச் மாதம் விடுமுறைக் காலம். அதன்பின்னர் நீதிமன்றம் செயல்படாது. இதை உணர்ந்த நீதிமன்றம் இறுதிக் கட்டத்தில் இ.டி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமலே தள்ளுபடி செய்துவிட்டு, ஜாமின் வழங்கப்பட்டது.

ஆனால், இ.டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இன்றைக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காகக் காரணம் காட்டி, கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கினால் நாளை ஒருவர் விவசாயம் செய்ய வேண்டும் எனப் பிணைக் கேட்டால் கொடுக்க முடியுமா? என வாதிட்டது.
ஆனால், இதை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறி, இ.டி தரப்பு வாதத்தை நிராகரித்துவிட்டது.
முதலில் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யவில்லை. அவர் இந்த வழக்கில் தன்னை கைது செய்ததே சட்ட விரோதம் என்று கூறிதான் அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

அப்படிப் பார்த்தால் நீதிமன்றம் விடுமுறைக் காலம் வர உள்ளது. அடுத்து ஜனநாயகத்தில் பிரதான விசயம் தேர்தல். அதில் ஒருவரைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது நியாயம் அற்றது.
நீதிமன்றம் கைது சட்டப்படி நடந்துள்ளதா என்றுதான் விசாரித்து வருகிறது. ஒருவேளை கைதே சட்டவிரோதம் என முடிவெடுக்கவேண்டிய நிலை நாளை உருவானால், தேர்தலே முடிந்துவிடும். அவருக்குப் பிரச்சாரம் செய்யக் கூடிய வாய்ப்பும் போய்விடும். ஆகவே ஜாமின் தருவது தவிர வேறு வழியில்லை எனக் கைவிரித்துவிட்டது நீதிமன்றம்.
ஆளுநருக்கும் சம அளவில் பொறுப்பு!
எனவேதான் கெஜ்ரிவால் ஜாமின், பாஜகவின் இமேஜை பாதித்துள்ளது. இதுவரை கெஜ்ரிவால் 3 முறை சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ளார். டெல்லியில் செல்வாக்கு உள்ள அரசியல் தலைவராக உள்ளார். முதலமைச்சராக அவர் இருந்தாலும் அவரது கட்டுப்பாட்டில் எந்த இலாக்காவும் வைத்துக் கொள்ளவில்லை.

அப்படியானால் இ.டி குறிப்பிட்டு கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டை வைக்க முடியாது. ஏனென்றால் டெல்லி யூனியன் பிரதேசம். அங்கே எல்.ஜிக்கும் (Lieutenant Governor of Delhi) அதிகாரம் உள்ளது. அவர் கையெழுத்திட்ட பின்பே ஒரு மசோதா நிறைவேற்ற முடியும். சம அதிகாரம் பெற்றவர் ஆளுநர்.
எனவேதான் இந்த விசயத்தில் கெஜ்ரிவால் குறித்து டெல்லி மக்களிடம் ஒரு அனுதாப அலை உருவாகிவிட்டது. அவரது கைது இப்போது பல சந்தேகங்களை விவாதிக்க வைத்துள்ளது. அது நேரடியாக பாஜகவைப் பாதிக்கும்படியாக மாறி உள்ளது.
ஹிந்தி மாநிலங்களில்தான் பாஜக பலம் வாய்ந்ததாக உள்ளது. அதாவது குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உபி ஆகிய மாநிலங்கள்தான் பாஜகவின் கோட்டைகள். கடந்த 2019இல் இந்த மாநிலங்கள் எல்லாம் தான் பாஜகவுக்குக் கைகொடுத்தன.
பழிவாங்கப் போகும் 3 மாநிலங்கள்:
இந்த முறை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால், சட்டசபைத் தேர்தல்களில் பாஜகதான் வென்றது. இந்த 2 மாநிலங்களிலும் பாஜகதான் முதல் கட்சி.
ஆனால், மபியில் பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் முதல்வராகவும் இருந்த சிவராஜ் சிங் சவுகானை மாற்றியது பாஜக தேசிய தலைமை. 3 ஆண்டுகள், 265 நாட்கள் தான் இவர் பதவியிலிருந்தார். அதற்குள் யாதவ் சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவை முதல்வராக மாற்றியது பாஜக.

இதனால், சவுகான் சமூக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் இவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மபி பாஜகவில் சின்ன சலசலப்பு உண்டாகி உள்ளது. அது இந்த மக்களைவைத் தேர்தலைப் பாதிக்கும் என்கிறார்கள்.
சவுகானுக்கு வயதாகிவிட்டது என்று சொன்ன பாஜக, இப்போது மோடிக்கு வயதானாலும் பரவாயில்லை. அவர்தான் பிரதமர் என்கிறது.
இதைப்போன்று ராஜஸ்தான். இங்கே முதல்வராக இருந்த வசுந்தரா ராஜேவை கழற்றிவிட்டுவிட்டு பஜன் லால் சர்மா போட்டுள்ளது பாஜக. இதுவும் உட்கட்சி பூசலை உண்டாகி உள்ளது.
கடந்த முறை ராஜஸ்தானில் பாஜக 25க்கு 24 தொகுதிகளில் வென்றது. இந்த முறை அது நடக்கவே நடக்காது. இதே மாதிரிதான் உபி.
கடந்த 2019 பகுஜன் சமாஜ் கட்சியும் சாஜ்வாடியும் சேர்ந்து போட்டியிட்டன. ஆனால், பகுஜன் கட்சி கிட்டத்தட்ட 10 சீட்டுகளை வென்றது. சமாஜ்வாதி அந்தளவுக்கு வெற்றி பெறவில்லை.
காரணம், தலித் ஓட்டுக்கள் அகிலேஷ் யாதவ் கட்சிக்குக் கிடைக்கவில்லை. ஆனால், யாதவ் மற்றும் முஸ்லிம் ஓட்டுகள் மாயாவதிக்கு கிடைத்தது.
இந்தமுறை அதனை உணர்ந்துதான் சமாஜ்வாடி கட்சி பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால், யாதவ், தலித், முஸ்லிம் ஓட்டுக்கள் இந்த அணிக்குக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்தக் கூட்டணியால் யோகிக்கு நெருக்கடி முற்றி உள்ளது. பாஜக கடந்த முறை பெற்ற சீட்டுகளில் கால்வாசியைக் கட்டாயம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மறைமுகமாக மோடியை ஆதரிப்பதாலும், பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்கு அதிகார சண்டை உண்டாகி இருப்பதாலும் காங் கூட்டணி கிட்டத்தட்ட 40 இடங்களுக்கு மேல் வெல்லக் கூடும் என்றும் மாயாவதி பழைய இடங்களை இழக்க நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications