யோகி தொகுதியில் பாஜக காலி! Common manifesto இல்லாத ‘இந்தியா’ கூட்டணி? தராசு ஷ்யாம் சவுக்கடி!
சென்னை: 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் பல குரல்களில் பேசுகின்றன. இந்தக் கூட்டணிக்கு என்று ஒரு Common manifesto இல்லை என்று பாஜக குற்றஞ்சாட்டி வருகின்றது.
காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணிக்கு Common manifesto இல்லாதது ஒரு பின்னடைவை ஏற்படுத்துமா? அல்லது இந்தப் பொதுத் தேர்தல் அறிக்கை என்பது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கைக்குள்ளாகவே வந்துவிடுமா? என்று பல சந்தேகங்கள் எழுகின்றன.

முதலில் மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பற்றியே பேசி வந்தார். பாஜக கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் என்ன உள்ளது என்பதை மக்களிடம் விளக்கிப் பேசுவதைவிட, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பற்றியே அதிகம் விவாதித்தார்.
மேலும் காங். அறிக்கையில் இல்லாத செய்திகளை எல்லாம் பிரச்சாரத்தில் மோடி பேசினார். மோடி சொல்வதைப் போல் காங். அறிக்கையில் உள்ளதா? என ஆங்கில ஊடகங்கள் ஃபேக் செக் செய்து பட்டியல் போட்டு உண்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தின.
இப்போது காங். தேர்தல் அறிக்கையை விட்டுவிட்டு, 'இந்தியா கூட்டணிக்கு ஒரு Common manifesto இல்லை' என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளது பாஜக.
இப்படிப் பல வழிகளில் காங்கிரசை பாஜக தாக்கிவந்தாலும். தேர்தல் களம் அந்தக் கட்சிக்குச் சாதகமாகவே இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

'இந்தியா' கூட்டணிக்கு என்று ஒரு பொதுவான தேர்தல் அறிக்கை (Common manifesto) இல்லாதது பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் என்ன சொல்கிறார்?
அவரிடம் பேசினோம், "காங்கிரஸ் வேறு குரலில் பேசுகிறது. மம்தா இன்னொரு குரலில் பேசுகிறார். திமுக பேசுவதைக் கூட்டணியில் உள்ள வேறு கட்சிகள் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
"பல மாநிலக் கட்சிகள் இணைந்துதான் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆகவே ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருப்பது உண்மைதான்.
அதனால் சில சலசலப்புகள் வருவதும் இயற்கைதான். தமிழ்நாட்டில் திமுக 'நீட்' கூடாது என்கிறது. வேறு கட்சிகள் அதில் உடன்படுகின்றனவா என்பது கேள்வி. பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா அதை ஏற்பாரா எனத் தெளிவு இல்லை. இப்படி சில முரண்பாடுகள் நிலவுவது உண்மை.

'இந்தியா' கூட்டணிக்குள் Common Minimum Programme என்பது எப்போது வரும்? வெற்றிபெற்றதற்குப் பிறகுதான் வரும். அதற்கு முன் அதைப்பற்றிப் பேச முடியாது. 2004இல் அப்படித்தான் நடந்தது. யுபிஏ கூட்டணி முதல்முதலாக ஆட்சி அமைத்த போது இது நடந்தது.
அதேநிலைதான் இப்போதும் பொருந்தும். ஒருவேளை 'இந்தியா' கூட்டணியில் அதிக இடங்களைக் கொண்டுள்ள மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை திமுகவுக்குக் கிடைத்துவிட்டால், என்ன நடக்கும்? கூட்டணியில் திமுகவின் குரல் வலுப்படும். திமுக சொல்வது எடுபடும். அதுதானே இயற்கை.
அப்படி இல்லை, மம்தா ஒரு 30 எம்பிக்களை வைத்திருக்கிறார் என்றால் அவர் குரல் அதிகமாகக் கேட்கும். ஆகப் பெரிய பார்ட்னர் யாரோ அவரது குரல் வலிமை பெறும்.

அப்படிப் பார்த்தால் உபியில் 80 தொகுதிகள். அதில் அகிலேஷ் யாதவின் கட்சி அதிக இடங்களில் போட்டிப் போடுகின்றது. பீகாரில் அப்படித்தான் தேஜஸ்வி யாதவ். அகிலேஷ் கட்சியும் தேஜஸ்வி கட்சியும் எப்போது ஒரு அலைவரிசையில் சேர்ந்து செயல்படுபவர்கள்.
இவர்களின் இரண்டு கட்சிகளும் சேர்ந்து 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், 'இந்தியா' கூட்டணியில் இந்த இருவரின் குரல்தான் எடுபடும்.
ஆகவேதான் சொல்கிறேன். Common Minimum Programme என்பது வெற்றியைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும். இந்தியா கூட்டணிக்கு Common Minimum Programme தான் தேவை. Common manifesto என்பது தேவை இல்லை.
இந்த வாதம் எல்லாம் திசை திருப்பலுக்காக முன்வைக்கப்படுபவை. பாஜக பல வழிகளில் மக்களைத் திசை திருப்ப முயற்சி செய்துகொண்டேதான் இருக்கிறது.
'வடமாநிலத் தொழிலாளர்களைத் தமிழ்நாட்டில் தாக்குகிறார்கள்' என்று மோடி பேசி இருக்கிறார். ஆனால், உண்மை என்ன? அதைக் கண்டித்து ஆங்கில பத்திரிகை இந்து எழுதி உள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பல தொழில்கள் ஸ்தம்பித்துவிடும்.
ஆகவே நாம் வடமாநிலத் தொழிலாளர்களை வரவேற்கிறோம். அவர்களின் குடும்பங்கள் இங்கே மிக அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னால் ஒருவர் தவறான ட்வீட் போட்டதற்காகத் தமிழ்நாடு அரசு அந்த நபரைக் கைது செய்தது. அதைக் கூட இந்து சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனால், இதை எதுவும் கவனத்தில் கொள்ளாமல் பிரதமர் மோடி பேசுகிறார். இந்தப் பேச்சுக்கள் எவையும் பாஜகவுக்கு கை கொடுக்கவில்லை.
கோரக்பூரிலேயே பாஜக வெற்றி பெறாது என்று செய்தி வெளியாகியுள்ளது. கோரக்பூர் மடத்தை முன்வைத்தே ராமர் கோயில் அரசியல் கட்டமைக்கப்பட்டது. அங்கே யோகி ஆதித்யநாத் தாத்தாதான் இதற்கு முதல் குரல் கொடுத்தவர். அந்த மடத்தின் பீடாதிபதிகளில் வரிசையில் வருபவர்தான் யோகி ஆதித்யநாத்.
யோகி ஆதித்யநாத் சொந்த தொகுதியான கோரக்பூரில் பாஜக வெற்றி பெற முடியாமல் தத்தளித்து வருவதாகச் செய்திகள் வருகின்றன. அதே போல் அயோத்தி கோயில் உள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக திணறி வருகிறது.
அதை எல்லாம் மறைக்கத்தான் பாஜக இந்த Common manifesto பற்றி எல்லாம் கேள்வி எழுப்பி வருகிறது. இந்த வாதம் எல்லாம் தேர்தல் களத்தில் எதிரொலிக்காது" என்கிறார்












Click it and Unblock the Notifications