40/40 திமுக வெற்றி! மீண்டும் மோடி பிரதமர்? அண்ணாமலை வைத்த வேட்டு! கடுப்பான மணி!
சென்னை: திமுக கூட்டணி 40 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்று பத்திரிகையாளர் மணி கூறியிருக்கிறார். ஆனால், அதே வேளையில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பேசி இருக்கிறார்.
இதுவரை மக்களவைத் தேர்தல் 6 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து இறுதிக் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மொத்த 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பாஜக இந்த முறை 400 தொகுதிகளை வெல்வோம் என்று சொல்லி வருகிறது. ஆனால், அரசியல் விமர்சகர்கள் பாஜக 200 சீட்டுகளைத் தாண்டுவதே கஷ்டம் என்று சொல்லி வருகிறார்கள்.
பிரதமர் மோடிக்கு 2019 இல் இருந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றே பலரும் கூறிவருகின்றன. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மோடிக்குப் பல வழிகளில் நெருக்கடியாக அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் மணி மீண்டு மோடி பிரதமராக வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதியையும் கைப்பற்றும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வெற்றிக்கு அண்ணாமலையின் தவறான அரசியல் கணக்குதான் காரணம் என்றும் அவர் பேசியுள்ளார். இது பற்றி மணி, “இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் வெற்றிபெறும் என நான் நம்புகிறேன். அப்படித்தான் நடக்கும் என்பது என் கணிப்பு. ஆனால், இந்தப் புகழ் எல்லாம் அண்ணாமலைக்குத்தான் போய்ச் சேரும்.
நான் சொல்வதைப் போல ஒருவேளை நடந்தால், திமுகவும் காங்கிரசும் யாராவது ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைத்தால், கட்டாயம் அண்ணாமலைக்குத்தான் சொல்ல வேண்டும்.
அண்ணாமலைக்குத்தான் இந்த இருவரும் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும். ஏனென்றால் அதிமுகவுடன் நன்றாக இருந்த கூட்டணியை அவர்தான் நாசம் செய்தார். 2019இல் அதிமுக கூட்டணி அப்படியே தொடர்ந்திருந்தால், கட்டாயம் 20 தொகுதிகளில் மிகப்பெரிய போட்டியை இந்த அணி கொடுத்திருக்கும்.

திமுக அரசு மீது அடிமட்டத்தில் ஒரு அதிருப்தி இருப்பதாக நான் உணர்கிறேன். நான் கண்கூடாக அதைப் பார்க்கிறேன். ஆனால் இது அதிமுகவுக்கோ அல்லது பாஜகவுக்கோ பலன் தரப்போவதில்லை. ஏனென்றால் தேர்தல் என்பது எண்கள் விளையாட்டு. அதில் திமுக முன்னால்தான் நிற்கிறது.
இதில் ஸ்டாலினின் சாதனை என்னவென்றால், ஒரே கூட்டணி தொடர்ந்து 3 தேர்தல்களாகத் தொடர்ந்துகொண்டுள்ளது. இது திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியே செய்யாத சாதனை. அப்படித்தான் நான் பார்க்கிறேன்.
அதேபோல கடந்த முறை அவர் செய்த தவற்றை இந்த முறை அவர் செய்யவில்லை. ராகுல்காந்திதான் பிரதமர் என்று அவர் இந்த முறை சொல்லவில்லை. அது ஒரு நல்ல வியூகம்.

இந்த மக்களவைத் தேர்தலில் 4 முனைப் போட்டி வந்தது திமுகவுக்கு மிகப்பெரிய சாதகமாக மாறியுள்ளது. இந்தத் தவறுக்கும் அண்ணாமலைதான் காரணம்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பாஜக தேசிய தலைமை மீண்டும் பழைய என்டிஏ கூட்டணியிலிருந்த கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டுவர முயன்றார்கள். அதற்காகத்தான் சந்திரபாபு நாயுடுவைத் தேடிச் சென்றார்கள். அதேபோன்று அதிமுகவுடன் சேர முயற்சி செய்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
2004இல் எப்படி பிரதமரைத் தேர்வு செய்யும் இடத்தில் தமிழ்நாடு இருந்ததோ, அதேநிலை மீண்டும் இந்த முறை திரும்பலாம்.
பாஜக 220 முதல் 230 இடங்களில் தனியாக வெல்லும். இது என் கணிப்புதான். ஆனால் இது எனது விருப்பம் அல்ல. கடந்த முறை 303 சீட்டுகளை பாஜக வென்றது. இதுதான் பாஜகவின் உச்சகட்ட பலம். அதற்கு மேல் இனி போக முடியாது. இந்த முறை கட்டாயம் அது நடக்காது.
அதாவது 272 என்பது ஒரு மேஜிக் நம்பர். இவ்வளவு இடங்களை வென்றுவிட்டால் போதாது. அதற்கும் மேல் போனால்தான் மோடியால் பாதுகாப்பாக ஆட்சி நடத்த முடியும்.
காங்கிரசுக்கு இதற்கு இணையான இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. அது எங்கிருந்து கிடைக்க முடியும் என்பதே என் சந்தேகமாக இருக்கிறது.
ஜூன் 4 ஆம் தேதி யார் பிரதமராக வந்தாலும் நாம் ஏற்றுக்கொள்வோம். மக்கள் தீர்ப்பு என்னவோ அதற்குத் தலை வணங்கப் போகிறோம்.
ஆனால், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்தத் தேர்தல் முக்கியமானது. சொந்த நாட்டு மக்களை ஒரு பிரதமர் இரண்டாகக் கூறு போட்டுள்ளார். இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தி இருக்கிறார். ஒடிசாக்காரர்களை தமிழர்களுக்கு எதிராக நிறுத்தி இருக்கிறார்.
இப்படி இதுவரை எந்தப் பிரதமர்களும் கூறு போட்டதில்லை. ஆகவே, வரலாற்றில் மோடியின் பேச்சுகள் பதியப்படும் என்பது மட்டும் உறுதி” என்கிறார்
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்










Click it and Unblock the Notifications