ராமர் கோயில் மோடிக்குப் பலன்தரவில்லை! ராகுல் பிரச்சாரம் சரி! சுமந்த் சி ராமன் பல்டி !
சென்னை: இந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் பாஜகவுக்கு பலன் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன்.
ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தைக் கையில் பிடித்த படி தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். ஆனால், அதில் கூட பாஜக ஒரு அரசியலைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

ராகுல் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குப் பதிலாகக் கையில் சீன அரசியலமைப்பு சட்டத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒரு புதிய குண்டை தூக்கி வீசி இருந்தார்.
ஆக, ராகுல் எதைச் செய்தாலும் அதை வைத்து பாஜக ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கி வருகிறது. ஆகவே மக்களவைத் தேர்தல் களம் காரசாரமான விவாதத்திற்குப் பஞ்சமே இல்லாமல் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் முதல் கட்டத்தின் போதே தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், அதன் தாக்கம் அல்லது பரபரப்பு பற்றி பெரிய அளவில் மக்களுக்குத் தெரியவில்லை.
இந்த மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், அதில் 4 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்துவிட்டது. இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு மட்டும் நடக்க உள்ளது. 5 ஆம் கட்ட தேர்தலுக்காக வடமாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
மோடி, ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள் என்கிறார். மீண்டு கூடாரத்திற்கு ராமரைக் கொண்டு சென்று விடுவார்கள் என்கிறார். இப்படி அடுக்கடுக்கான புகார்களைக் காங்கிரஸ் மீது வைத்து வருகிறார்.
ஆனால், இந்தத் தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் பாஜகவுக்குப் பலன் அளிக்கவே இல்லை என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் சுமந்த் சி ராமன். கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவை விட்டுக் கொடுக்காமல் பேசி வந்த அவர், மோடியைத் தேர்தல் ஆணையம் கண்டிக்காதது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு உண்மையில் அயோத்தி ராமர் கோயில் கைகொடுக்கவில்லையா? இந்தத் தேர்தலில் அது ஓட்டாக மாற வாய்ப்பு இல்லையா? அது பற்றி சுந்த் சி ராமன், "பிரதமர் மோடி மக்களுக்கு வரும் ஆட்சிக்காலத்தில் என்னென்ன செய்யப் போகிறோம். என்ன மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறோம் என்பதை இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாகச் சொல்லவே இல்லை.
ஆனால், காங்கிரஸ் ஆரம்பத்திலிருந்து மக்களுக்கு என்ன மாதிரியான திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறோம் என்பதைத் தெளிவாகச் சொல்லி வருகிறது. அதில் யாருக்குமே சந்தேகமே இருக்காது என்றே சொல்லலாம்.
பிரதமர் மோடி, சைக்கிள் 2 இருந்தால் ஒன்றைப் பிடுங்கி விடுவார்கள். 2 வீடு இருந்தால் ஒரு வீட்டைப் பிடுங்கிவிடுவார்கள். 2 மாடு இருந்தால், ஒரு மாட்டைப் பிடுங்கிவிடுவார்கள் என்று சொல்லியே பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.
அதற்கு மாறாகக் காங்கிரஸ் தனது திட்டங்களைத் தெளிவாக மக்களிடம் கூறி வாக்கு கேட்டு வருகிறது. காங். நியாய பத்திராவில் உள்ள திட்டங்களை மக்களிடம் பேசி வாங்குக் கேட்கிறார்கள்.
பிரதமர் மோடி, பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ளதை எடுத்துச் சொல்வதற்கு மாறாக, காங். தேர்தல் அறிக்கையில் இருப்பதாகச் சொல்லி சிலவற்றைப் பேசி வருகிறார். அவர் சொல்வதைப் போல காங் தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லை. ஆனால், மோடியே பேசிக்கொண்டிருக்கிறார்.
தேர்தல் ஆணையமும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதைப்போல் தெரியவில்லை.
இந்தத் தேர்தலில் பாஜகவின் பிரச்சாரத்திற்கு ராமர் கோயில் கைகொடுக்கவில்லை. அதுதான் உண்மை. அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அது பலன் தரவில்லை.

இந்தத் தேர்தலை ஒன்றே முக்கால் மாசம் வரை இழுத்ததே தவறு. அது தேர்தல் ஆணையம் செய்தது. பாஜகவுக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னால், அதைக் குழந்தை கூட நம்பாது.
எனது நண்பர் ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னார்கள். 4 ஆம் கட்டம் அல்லது 5 ஆம் கட்டம் வரைத் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் முன்பு கிடைத்த வாக்கு சதவீதம் கூட கிடைத்திருக்காது என்று சொன்னார். அது நியாயமாகவே எனக்குத் தோன்றியது.
இன்றுவரைகூட பிரதமர் மோடியின் செல்வாக்கு அளவுக்கு ராகுல் காந்தியின் செல்வாக்கு அல்லது புகழ் உயர்ந்துவிட்டதா? என்றால் நிச்சயமாக அது இல்லை. ஆனால், 'இந்தியா' கூட்டணி செய்த புத்திசாலித்தனம் என்ன தெரியுமா?
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காததுதான். அப்படி மோடிக்கு எதிரானவர் யார் என காங். காட்டி இருந்தால் இந்தத் தேர்தல் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். அதை காங். செய்யாதது சிறப்பானது.
அதே நேரத்தில் மோடி அலை என்பது நாட்டில் பெரிதாக இப்போது இல்லை. அதனால்தான் இப்போது ஒவ்வொரு வேட்பாளர் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார் என்பது பேசு பொருளாக மாறியுள்ளது.
ஸ்மிருதி இரானி கடந்த தேர்தலில் 1 கிலோ சர்க்கரை 13 ரூபாய்க்குத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. அது இப்போது அமேதியில் மிகப்பெரிய பிரச்சாரமான அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
இந்தத் தேர்தலில் அரசாங்கத்தின் எல்லா அமைப்புகளுமே பாஜக பக்கம் உள்ளது. அளவுக்கு அதிகமான பணம் உள்ளது. அதிகாரம் உள்ளது. ஊடக பலம் அதிகம் உள்ளது.
எனவே காங்கிரசும் பாஜகவும் சமமான பலத்துடன் மோதவில்லை. ஏனென்றால் அனைத்து பாஜக தனது கட்டுப்பாட்டில் அனைத்தையும் வைத்துக் கொண்டு காங்கிரசை எதிர்க்கிறது. சம அளவில் போட்டி இருந்திருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும்" என்கிறார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications