சர்ச்சையில் சிக்கிய 17சி படிவம்! இதை வைத்து கள்ள ஓட்டுகளைக் கண்டுபிடிக்க முடியுமா?
சென்னை: 17சி படிவம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அதன்மூலம் எப்படி வாக்குச்சாவடிகளில் நடைபெற்று முறைகேடுகளைக் கண்டுபிடிக்க முடியும்?
சில நாள்கள் முன்னதாக எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற எண்ணிக்கை விவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.

அந்த எண்ணிக்கை என்பது தொகுதிவாரியாகவோ அல்லது வாக்குச்சாவடிவாரியாகவோ வெளியிடாமல் ஒட்டுமொத்தமாக இவ்வளவு வாக்குகள் என்று ஆணையம் சொல்லி இருந்தது.
இந்த எண்ணிக்கைக்கும் கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் நிலவுகிறது.
கிட்டத்தட்ட 5% வாக்குகள் அளவுக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படுகின்றது. அப்படி என்றால், இப்போது 1 கோடி ஓட்டுக்கள் எண்ணிக்கையில் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது குறித்துத்தான் முறையான தரவுகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தாக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளன என்ற எண்ணிக்கையைக் கண்டுபிடிப்பது எல்லாம் பெரிய கம்பசூத்திரம் இல்லை. அதற்கு என்று சில எளிய வழிகள் உள்ளன. அதை ஆராய்ந்தாலே அனைத்து தரவுகளையும் எடுத்துவிடலாம்.
சுருக்கமாகச் சொன்னால், வாக்காளர்கள் வாக்களிக்க வரும் வாக்குச் சாவடிக்குள் பல கட்சியைச் சேர்ந்த தேர்தல் முகவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் வருகின்ற ஒவ்வொரு ஆள்களையும் விசாரித்து அந்த நபரின் வாக்கு, அடையாள அட்டை எண் இதை எல்லாம் குறித்துக் கொண்டு படிவத்தில் டிக் அடித்துக் கொண்டே வருவார்கள்.

இப்படிக் குறிக்கப்படும் எண்ணிக்கையைக் கட்சியாகக் கூட்டிச் சரி பார்ப்பார்கள். ஒருவருக்கும் இன்னொருவருக்கும் ஏதேனும் விடுபடல் அல்லது முரண்பாடு உள்ளதா எனச் சோதிப்பார்கள்.
இறுதியாக 17சி படிவத்தில் இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 48 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில், 45 ஆயிரத்து 500 வாக்குகள் வரை பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டு, அதற்கு அனைத்து கட்சி முகவர்களிடமும் ஒப்புதல் பெற்று பெட்டிக்குள் வைத்து சீல் வைத்து அனுப்பிவிடுவார்கள்.
17C படிவத்தில் தான் ஒவ்வொரு பூத்தில் பதிவான மொத்த வாக்குகள் விபரம், வாக்கு இயந்திரத்தின் வரிசை எண்கள், (control unit, Ballot unit and VVPAT), கட்சி முகவர்கள் கையெழுத்து என அத்தனை விபரங்கள் இருக்கும்.

அதில் உள்ள எண்ணிக்கையைத்தான் இப்போது வெளியிடச் சொல்லித் தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. அதைச் சொல்லவே ஒரு வாரம் அவகாசம் தேவை என்கிறது தேர்தல் ஆணையம். இது விந்தையாக உள்ளதாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்தச் சர்ச்சை பற்றி திமுக மாணவரணியைச் சேர்ந்த அமுதரசன் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார். இது பற்றி அவர், “17சி படிவம் என்று ஒன்று தேர்தல் வாக்குச்சாவடியில் வழங்கப்படும். அதில் அந்த வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரத்தின் எண் என்ன என்று பதிவுசெய்ய வேண்டும்.
மேலும் மொத்த வாக்குகள் எவ்வளவு உள்ளன? ஆண் வாக்காளர்கள் எவ்வளவு? பெண் வாக்காளர்கள் எவ்வளவு ? இந்தத் தரவுகள் எல்லாம் அதில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அதைப் போல எத்தனை வாக்குகள் போடப்பட்டுள்ளன? பதிவாகாத வாக்குகள் எவ்வளவு? இதைப் போன்ற பல்வே தரவுகளை நீங்கள் இந்த 17சி படிவத்திலிருந்து பெற முடியும்.
இதை எல்லாம் வைத்துத்தான் வாக்குகள் எண்ணும் போது சரிபார்ப்பார்கள். அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். ஆனால், அதற்கு உடனடியாக தீர்வு கிடைக்காது. நாம் அதில் உள்ள குளறுபடிகளை வைத்து, அதனைச் சுட்டிக்காட்டி வழக்குகள் போடலாம்.

இதை எதிர்த்து எல்லாம் நீதிமன்றம் போனால் உடனடியாக தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அது காலம் கடந்து இழுத்தடிக்கப்படும். இதுவே இதுவரையான நடைமுறையாக உள்ளது.
இன்றைக்குச் சபாநாயகராக உள்ள அப்பாவு கடந்த தேர்தலில் அவர் இப்படித்தான் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி வழக்குப் போட்டார். அதற்கு அடுத்த தேர்தல் வரும்வரை நீதி கிடைக்கவில்லை. அந்த ஆட்சிக்காலமே முடிந்துவிட்டது” என்கிறார்.
இந்த 17சி படிவம் ஏன் முக்கியம் என்றால், இந்தப் படிவத்தை வைத்துத்தான் ஓட்டு எண்ணும் போது ஒவ்வொரு பெட்டியையும் ஒவ்வொரு கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் சரிபார்ப்பார்கள்.
வாக்கு எண்ணும் அன்று பூத் வாரியாக வாக்குப் பதிவு இயந்திரத்தைத் திறக்கும் போது இந்த 17 C படிவத்தில் குறிப்பிடப்பட்ட விபரங்களை வேட்பாளர்களின் முகவர்கள் சரிபார்த்தால்தான் ஏதேனும் தவறுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.
இதில் குறிப்பாக பூத் எண், மொத்த வாக்குகள் எண்ணிக்கை, வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசை எண்ணைச் சரிபார்க்க வேண்டும்.
அதில் ஏதும் வித்தியாசம் இருந்தால், குறிப்பாகப் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கையில் வித்தியாசம் தெரிந்தால் நிச்சயம் அந்த பூத்தின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தலாம். சந்தேகங்களை நிவர்த்தி செய்த பிறகே வாக்கு எண்ண அனுமதிப்பார்கள். அந்தளவுக்கு முக்கியமானது இந்த 17சி படிவம்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications