அட.. சூப்பர்.. தமிழ்நாடு வெதர்மேன் கடைசியில் அந்த நல்ல செய்தியை சொல்லிவிட்டார் மக்களே!
தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த வாரம் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த வாரம் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.
தமிழகத்தில் தற்போது மிக கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்கிறது. சென்னையில் வெயில் மாலை வரை மிக மோசமாக வாட்டி வருகிறது.

ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது. ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி 103 டிகிரி, அடுத்த நாள் 13-ந் தேதி 105 டிகிரி, 14-ந் தேதி 104 டிகிரி வெயில் என மிக மோசமாக இருந்துள்ளது.
இதே நிலை பல மாவட்டங்களில் நிலவியது. இந்த வருடம் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறார். அதன்படி தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த வாரம் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.
ஆனாலும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விருதுநகர், நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மழை பெய்யும். இந்த வாரம் இந்த பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும்.
ஆனால் சென்னையில் இந்த வாரமும் வெயில் அடிக்கவே வாய்ப்பு இருக்கிறது. மேற்கில் இருந்து வரும் காற்று தற்போது தமிழகத்தில் வீசும் காற்றுடன் மோதுவதால் இந்த மழை பெய்யும் என்று வெதர்மேன் கூறி இருக்கிறார்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications