கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி கேள்வி.. பெரும்பான்மையை உருவாக்கனும் என பேச்சு
சென்னை: விஜய் நினைத்து இருந்தால் அதிமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்து இருக்க முடியும். ஏன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். ஏன் என்றால் விஜய் மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். சமூக நீதி கொள்கையில் உறுதியாக உள்ளார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சரமாரி கேள்விளையும் எழுப்பியுள்ளார்.
மதுரந்தகத்தில் நடைபெற்ற தவெக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- விஜய் நினைத்து இருந்தால் அதிமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்து இருக்க முடியும். சமூக நீதி கொண்ட நம்பிக்கையால்தான், விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

இங்கே வேட்பாளர்கள் போட்டுள்ள கம்யூனிஸ்ட் தோழர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். சிஎம்டிஏவில் திமுக லஞ்சம் வாங்கியதா இல்லையா? டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றதா இல்லையா? அமைச்சர்கள் வாங்கினர்களா? இல்லையா? முதல்வர் ஃபண்ட் வாங்கினாங்களா இல்லையா? குடும்ப ஃபண்ட், அமைச்சர்கள் ஃபண்ட் , எம்.எல்.ஏக்கள் அராஜகம் செய்தார்களா இல்லையா?
அரசியலுக்கு வந்து பணம் சம்பாதித்து, பெரிய காலேஜ் கட்டி, வீடு கட்டியவர்களுக்கு மத்தியில் இன்று எதுவுமே வேண்டாம் என்று முதல்வர் நின்று கொண்டு இருக்கிறார். இதுதான் மாற்றம். சமூக நீதி கொள்கை, மதசார்பற்ற கொள்கை.. ஏன் அன்னைக்கு நினைச்சி இருந்தால் அதிமுக ஆதரவுடன் விஜய் முதல்வர் ஆகியிருக்கலாமே.. ஏன் காங்கிரஸ் உடன் போய் சேர்ந்தார். ஏன் கம்யூனிஸ்ட் கூட வந்து சேர்ந்தார்.
ஏனென்றால் விஜய் மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். சமூக நீதி கொள்கையில் உறுதியாக உள்ளார். டிபிஆர் ரிபோர்ட் வந்த பிறகுதான் தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் வேண்டுமா? வேண்டாமா? என்று முதல்வர் முடிவு செய்வார். முதல்வர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு டிபிஆர் ஆய்வுதான் மேற்கொண்டு வருகிறார்கள். உடனே அதை அரசியல் செய்கிறார்கள்.
அங்கே இருக்கிற கட்சிகள், மீனவ மக்களிடம் போய், தவெக அரசு உங்களுக்கு எதிராக செயல்படுகிறது. எல்லா மீனவ பகுதிகளையும் வெளியேற்ற போறாங்க என்று சொல்கிறார்கள். இதெல்லாம் போலியான அரசியல். எத்தனையோ தொழிலபதிர்கள் வந்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்யாதீர்கள் என்று சொன்னார்கள். எத்தனை கோடி வேண்டுமனாலும் பார்ட்டி பண்ட் கொடுக்க தயாராக இருந்தார்கள்.
ஆனாலும் பரந்தூர் விமான நிலையத்தை முதல்வர் தூக்கி போட்டார். முதல்வர் விஜய் யாரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. தலைமை செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் முதல்வர் நிற்பார். முதலில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படும். நிலத்தை பற்றி ஆய்வு செய்வோம். அங்குள்ள மீனவ மக்களுடன் கருத்து கேட்போம்.
ஆனால் அறிவிப்பு வந்த உடனேயே வரக்கூடாது என்கிறார்கள். ஏன் இந்த அரசியல்.. கம்யூனிஸ்ட் தோழர்கள் சில நேரம் வந்து பேசுவதுதான் வருத்தமாக உள்ளது. மரகதம் குமரவேல் ஒரு ரூபாய் கூட காசு வாங்கவில்லை. அதிமுக - திமுக இணைந்ததால் ராஜினாமா செய்துவிட்டு வந்தார். தவெக வெற்றி பெற்று பெரும்பான்மைக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும். என்று பேசினார்.


Click it and Unblock the Notifications
