கலக்கல் கலர் ஜோதிமுத்து உஜ்ஜாலாவுக்கு மாறிட்டாரு டோய்.. மிஸ்டர் ஒயிட் ஆக மாற்றிய திண்டுக்கல்லார்!
பாமக வேட்பாளருக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டை வாங்கி தந்தார்.
Recommended Video

சென்னை: கலர் கலராய் சட்டை போட்டு கொண்டு வலம் வந்து கொண்டிருந்த திண்டுக்கல் பாமக வேட்பாளரிடம் இப்போது அது மிஸ்ஸிங்! இதுக்கு காரணம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்தானாம்!
அதிமுகவின் கோட்டையான திண்டுக்கல் இப்போது பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இதற்கு காரணம் அந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், இன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் உள்ள புகைச்சல்தான்! இவர்கள் சண்டையை பார்த்து மிரண்ட அதிமுக, எதற்கு வம்பு என்று நினைத்து பாமகவுக்கு ஒதுக்கிவிட்டது.
ஆனால் அதற்கு மேல் மலங்க மலங்க மிரண்டு கிடக்கிறது பாமக. இந்த தொகுதியில் எப்படி ஜெயித்து வருவது என தெரியாமல் விழித்து கிடக்கிறது. இப்போது பாமக தோற்றுவிட்டால் எங்கே நம்ம தலை உருளும் என நினைத்தோ என்னவோ, திண்டுக்கல் சீனிவாசன் பாமகவுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தேர்தல் வேலை
இதை தவிர, 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி, ஆட்களை நியமித்து, தேர்தல் வேலையை படுசுறுசுறுப்பாக பார்த்து வருகிறார். தொகுதிக்கு என்ன செலவு ஆகுதோ அது எல்லாமே திண்டுக்கல்லார் தன் தலையில் தூக்கி போட்டுகொண்டு சளைக்காமல் செய்து வருகிறார்.

ஜோதிமுத்து
இதனிடையே பாமக வேட்பாளரான ஜோதிமுத்து வழக்கமாக அரைக்கை வைத்த கலர் சட்டைதான் அணிவாராம். அப்படித்தான் இதுநாள் வரை பிரச்சாரத்துக்கும் வந்தார். ஆனால் இதை பார்த்த திண்டுக்கல் சீனிவாசன், வேட்பாளருக்கு புது ஐடியா தந்தாராம்.

சட்டை போட்டுக்கணும்
இப்படி எல்லாம் கலர் கலர் சட்டை போட்டால் வேலைக்கு ஆகாது, அரசியல்வாதிகள் இப்படி சட்டை போட்டால், வாக்காளர்களை ஈர்க்க முடியாது என்று சொன்னாராம். அதனால், திண்டுக்கல்லில் உள்ள ராம்ராஜ் துணிக் கடைக்கு ஆள் அனுப்பி வைத்து, 20 ஒயிட் முழுக்கை சட்டைகளை எடுத்து தந்தாராம். இனி இப்படித்தான் சட்டை போட்டுக்கணும் என்று உரிமையோடு சொன்னாராம்.

ஒயிட் அண்ட் ஒயிட்
கலர் கலராய் காட்சியளித்த ஜோதிமுத்து இப்போது உஜ்ஜாலாவுக்கு மாறி ஒயிட் அண்ட் ஒயிட்டாக தொகுதிக்குள் வலம் வருகிறாரா! பார்ப்போம்.. திண்டுக்கல் தொகுதி முடிவில் வெள்ளை சட்டை ஒர்க் அவுட் ஆகிறதா என்று!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications