வயசாகி போய், பல் விழுந்த பிறகும் நடிக்கிறாங்க.. ரஜினிகாந்தை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓல்டு ஸ்டூடண்ட்.. துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். என்று நேற்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடிகர்கள் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்று கூறினார்.

அமைச்சர் எ. வ வேலு, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவானது நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில், அமைச்சர் எ.வ வேலு எழுதிய ‛கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

Minister Duraimurugan rajnikanth stalin

அப்போது விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகனை கலாய்த்து பேசினார். துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் என்று பேச முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் குலுங்க குலுங்க சிரித்தனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

எப்போதாவது ஒருமுறை தான் நான் பேசுகிறேன். அறிவார்ந்த சபையில் பேசாமல் இருப்பது தான் அறிவாளித்தனம் என்று சொல்வார்கள். இந்த விழாவில் என்ன பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்று லிஸ்ட் போட்டு தான் வந்தேன். எவ வேலு முதலிலேயே என்னிடம் சொன்னார். இது அரசியல் மேடை கிடையாதுங்க. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது என கூறி அழைத்தார். அரசியலில் ரொம்ப ஜாக்கிரதையாக பேச வண்டும்.

எப்போதும் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சினையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமில்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் இருக்கிறார்கள். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. இவங்க ஃபெயிலானவங்க இல்ல.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர்.

இவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க.. இதையெல்லாம் விடுங்க துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். இப்படி ஒன்று செய்யப்போகிறோம் என்று சொன்னால் சந்தோஷம்னு தான் சொல்வார். ஆனால் அவர் நல்லா இருக்கு என்பதற்கு இப்படி சொல்றாரா? இல்ல என்னடா இப்படி பண்றீங்கனு நினைச்சி அப்படி சொல்றாரான்னு சுத்தமா புரியாது. முக ஸ்டாலின் Hats off too you..'' என பேசினார்.

ரஜினிகாந்த் மேடையில் இப்படி பேசவே, அங்கிருந்த முதல்வர் ஸ்டாலின் ரஜினியை பார்த்து சிரித்தப்படி கையெடுத்து கும்பிட்டார். மேடையில் இருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதனால் நிகழ்ச்சி அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு பதில் தெரிவிக்கும் வகையில், பல்லு போனவர்கள் எல்லாம் இப்போதும் நடித்துக்கொண்டு இருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? என்று அமைச்சர் துரைமுருகனும் தமாசாக பேசியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:- மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல்லு விழுந்து போய், தாடி வளர்த்து சாகப்போகின்ற நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகின்றது என்று சிரித்தப்படியே கூறிச் சென்றார். நேற்று ரஜினிகாந்த் ஓல்டு ஸ்டூடண்ட் என்று பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இப்படி துரைமுருகன் பதில் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+