அதில் என்ன தப்பு இருக்கு! சோஷியல் மீடியாவில் பரவிய வீடியோவுக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் மாடர்ன் உடையில் காரில் இருந்து இறங்கி செல்லும் வீடியோ வைரலாகி வந்த நிலையில், இது தொடர்பாக தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதில் என்ன பிரச்சனை? என்றும் கீர்த்தனா கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கடந்த இரு நாட்களாக வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கி செல்லும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அந்த பெண் குட்டை பாவாடை அணிந்து இருந்தது, அவர் தோற்றத்தில் தமிழக அமைச்சர் கீர்த்தனா போல இருந்ததாலும் சமூக ஊடகங்களில் அதிகம் பரவியது.

TN Minister Keerthana clarifies regarding the video ask What wrong and raises serious concern

இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். தோற்றத்தில் அமைச்சர் கீர்த்தனா போல இருப்பதால், இப்படி பொதுவெளியில் இதுபோன்ற உடை அணிவதா? என்ற ரீதியில் பலரும் விமர்சித்து பதிவிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப்பொருளாக இந்த விவகாரம் இருந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில் அமைச்சர் கீர்த்தனா கூறியிருப்பதாவது:- பெண் ஒருவர் தனது அன்றாட வேலையை செய்யும் ஒரு வீடியோ, அரசியல் களத்தில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது அதற்குப் பின்னாலுள்ள பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான மனநிலையைப் பற்றிய அனைத்தையும் நமக்குத் தெளிவாக உணர்த்தி விடுகிறது.

பெண்களுக்கு எதிராக இழிவான கருத்துகளையே பேசுவதை வழக்கமாக கொண்ட தலைவரை பின்பற்றுபவர்களிடம் இருந்து வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும். எனக்கு இதில் ஆச்சர்யம் இல்லை. அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. ஒருவேளை அது நானாக இருந்தாலும்கூட, அது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

பெண்களின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை இன்னமும் கூட ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளப்பட்டு பொது விவாதத்திற்கு உள்ளாக்கப்படுகிறது? எங்களின் நிர்வாகம், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி சேலஞ்ச் செய்ய முடியாதவர்கள், தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தாக்குதல் தொடுக்க வதந்திகளை உருவாக்குகிறார்கள்.

ஆக்கப்பூர்வமாக சிந்திக்க முடியாதவர்களின் மிக பழமையான ஆயுதம் பெண் வெறுப்பு.. ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட காரணத்திற்காக இதற்குள் இழுத்து வரப்பட்டு இருக்கும் அந்த பெண்ணிடம் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் சொந்த விருப்பப்படியே, தொடர்ந்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் கடந்த இரு தினங்களாக பரவிய வீடியோ மற்றும் அதனை சார்ந்த விவாதத்திற்கு அமைச்சர் கீர்த்தனா தனது பதிலடியால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+