”கெத்து” தமிழ்நாட்டின் சொத்து.. வருங்கால மாமன்னன் உதயநிதி - தினுசாக புகழ்ந்த அமைச்சர் பி.மூர்த்தி
சென்னை: திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை அடுத்த மாமன்னன் என்று புகழ்ந்த வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, அவர் நடித்த திரைப்படங்களுக்கு புதிய விளக்கங்களை அளித்து புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வணிக வரித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அமைச்சரின் வாழ்த்து மழையில் நீந்திய உதயநிதி
அவர் தனது உரையின்போது, திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிட்டு வாழ்த்தி தெரிவித்தார். அவர் பேசியதாவது, "அன்புக்கு இலக்கணமாம் ஆருயிர் உதயநிதி அவர்களே... நீங்கள் நடித்ததோ ஒரு கல், ஒரு கண்ணாடி'. ஆனால் நீங்கள் வீசிய ஒரு செங்கல் கடந்த ஆட்சியை அல்லவா உடைத்து வீழ்த்தியது?

கெத்து! தமிழ்நாட்டின் சொத்து
நீங்கள் நடித்ததோ கெத்து'... நீங்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து. எதிரிகளை தனது சிரிப்பால் நண்பேண்டா என்று சொல்ல வைக்கும் அன்பன் நீங்கள்! உங்கள் நடிப்பில் உருவானதோ மனிதன். நிஜத்தில் நீங்கள்தான் மாமனிதன்'. நீங்கள் நிமிர்ந்தபோது தமிழ்நாட்டில் இளைஞர்கள் நிமிர்ந்தார்கள். இப்படை வெல்லும்' என்றீர்கள். இப்படைதான் எப்போதும் வெல்லும் என்பதை நித்தமும் காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டின் வருங்கால மாமன்னன்
பொதுவாக எப்போதும் உங்கள் மனசுதான் தங்கம். தங்கம்தான்! சரவணன் இருக்க பயமேன்' என்பது நீங்கள் நடித்த படம். உதயநிதி இருக்க பயமேன் என்பது தமிழகத்து இளைஞர்களின் எண்ணம். நெஞ்சுக்கு நீதியின்' பாத்திரம் ஏற்ற நடிகர் மட்டுமல்ல நீங்கள். நெஞ்சுக்கு நீதியின் அடுத்த பாகமாகவே வாழ்கிறீர்கள். மாமன்னன்' படம் அல்ல. தமிழ்நாட்டின் வருங்கால மாமன்னன் தாங்கள்தான்.

உதயநிதியை வணங்குகிறேன்
எங்களின் இதயம் கவர்ந்த உதயமும் நிதியுமாமான இளைஞரணி செயலாளாரே! உங்களை வணங்குகிறேன்." என புகழ்மழை பொழிந்தார். சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்துவது வழக்கமாகிவிட்டாலும் பி.மூர்த்தி இந்த புகழ் மழை உதயநிதியையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு இருந்தது. அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் ஆற்றிய இந்த உரையின் வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications