மன்றத்து ஆட்கள் உள்ளே வந்தால்.. விசாரிக்காமல் அனுப்பாதீங்க.. தவெக அமைச்சர்களின் புது ரூட்!
சென்னை: தங்களின் பி.ஏ. க்களிடம், நம் கட்சிக்காரர்களாக இருந்தாலும் கூட்டணி கட்சி காரர்களாக இருந்தாலும் எதற்காக வந்திருக்கிறார்கள்? என்று விசாரித்த பின்பே சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளார்களாம்.
தவெக அரசில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக லயோலா மணியையும், வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக சிவாவும் நியமிக்கப்பட்டி ருக்கிறார்கள். முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார் ஆகியோரை தவெக மா.செ.க்கள் பலரும் சந்தித்து கோரிக்கை வைப்பது கடந்த 3 நாட்களாக அதிகரித்தபடி இருக்கிறது.

ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கை கடிதத்தை அமைச்சர்களிடம் கொடுக்கி ன்றனர். அதில், 5-க்கும் மேற்பட்ட வாரியங்களின் பதவிகள் சுட்டிக்காட்டப் பட்டு, இதில் ஏதேனும் ஒரு வாரியப் பதவியில் தங்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துக்கின்றனர்.
விஜய் மக்கள் மன்றமாக இருந்த போது மாவட்ட அளவில் பணிகள்
மேலும், விஜய் மக்கள் மன்றமாக இருந்த போது மாவட்ட அளவில் தாங்கள் செய்த பணிகளையும் உழைப்புகளையும் விவரித்து ஒரு ஃபைலும், தவெக கட்சி துவக்கப்பட்ட பிறகு தவெகவின் வெற்றி க்காக செய்த பணிகளை தனி ஃபைலாகவும் 2 ஃபைல்களை தயாரித்து தங்களின் கோரிக்கை கடிதத்தோடு இணைத்து தருகிறார்கள்
அதாவது, மக்கள் மன்றமாக இருந்த போதும், கட்சி துவக்கப்பட்ட போதும் நாங்கள் அமைதியாக இருக்கவில்லை; இத்தனை ஆண்டுகாலம் தலைவர் விஜய்க்காக உழைத்திருக்கிறோம்; அதனால் வாரிய பதவி கேட்க எங்களுக்கு உரிமையும் தகுதியும் உண்டு என்பதை அமைச்சர்களுக்கு புரியும் வகையில் இந்த கோரிக்கையை தவெக மா.செ.க்கள் வைத்துள்ளனர்.
எல்லாம் தலைவருக்கு தெரியும்
மா.செ.க்களிடம், நீங்கள் வலியுறுத்தித்தான் தலைவருக்கோ எங்களுக்கோ தெரிய வேண்டியதில்லை. எல்லாம் தலைவருக்கு தெரியும். செய்ய வேண்டிய நேரத்தில் சரியாக செய்வார். பொறுமையாக இருங்கள் என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், மா.செ.க்களோ, அமைச்சர்களின் பதிலில் திருப்தி இல்லாமல் முணுமுணுத்தப்படியே அமைச்சர்களின் அலுவல கத்தை விட்டு வெளியேறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
காண்ராக்ட் வேலைகளை எங்களுக்கு ஒதுக்குங்கள்
இதற்கிடையே, சில மா.செ.க்கள் காண்ட்ராக்டர்களாகவும் இருப்பதால், வாரிய பதவி தரவில்லை எனில், நாங்கள் கேட்கும் காண்ராக்ட் வேலைகளை எங்களுக்கு ஒதுக்குங்கள். டெண்டரில் எங்களுக்கு கிடைக்கிற மாதிரி அதிகாரிகளிடம் சொல்லுங்கள். எந்த வருமானமும் இல்லாமல் எப்படி இருக்கிறது? என்றும் அழுத்தமாக சொல்லுகிறார்கள். வாரிய பதவிகள், காண்ட்ராக் கேட்டு தவெக மா.செ.க்கள் நெருக்கடித் தருவதால் இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழிக்கிறார்களாம் அமைச்சர்கள்.
எதற்காக வந்திருக்கிறார்கள்? என்பதை விசாரியுங்கள்.
இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாததால், தங்களின் பி.ஏ.க்களிடம், நம் கட்சிக்காரர்களாக இருந்தாலும் கூட்டணி கட்சி காரர்களாக இருந்தாலும் எதற்காக வந்திருக்கிறார்கள்? என்பதை விசாரியுங்கள். கோரிக்கை கடிதம் கொண்டு வந்திருந்தால் அதனை வாங்கிப் படியுங்கள். வாரிய பதவி, காண்ட்ராக்ட், டெண்டர் ஆகியவைகளை கேட்க வந்திருந்தால், நீங்களே பேசி சமாளித்து அனுப்புங்கள். எல்லோரையும் உள்ளே அனுமதித்து என்னை டென்சன் படுத்தக்கூடாது என்று ஸ்ட்ரிக்டாக உத்தரவு போட்டிரு க்கிறார்கள் அமைச்சர்கள்.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
