சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று அதிமுக மா.செ கூட்டம்... அமித்ஷாவை நேற்றே சந்தித்த 2 அமைச்சர்கள்.. பரபர தகவல்கள்

அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி சந்தித்து பேசியுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ்- ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ

    சென்னை: அதிமுகவின் முக்கிய அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி டெல்லியில் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளதே.. ஏன்? என்ன காரணம்?

    எப்போதெல்லாம், பாஜகவிடம் அதிமுகவிற்கு கருத்து வேறுபாடு வருகிறதோ அப்போதெல்லாம் டெல்லிக்கு கிளம்பி செல்வது தங்கமணி, வேலுமணி அமைச்சர்கள்தான்.

    இவர்கள் இருவருமே எடப்பாடியின் ஆதரவாளர்கள். எப்படியாவது உட்கார்ந்து பேசி ஒரு சமாதான பேச்சை நடத்திவிட்டுதான் சென்னை திரும்புவார்கள்.

    அசாதாரண சூழல்

    அசாதாரண சூழல்

    அந்த வகையில், தமிழகத்தில் இப்போது ஒரு அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. ஒற்றை தலைமை தேவை என்ற கூக்குரல் கட்சிக்குள்ளேயே எழுந்து வருகிறது. இன்று அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில்தான் நேற்று முன்தினம், இரு அமைச்சர்களும் டெல்லி சென்றுள்ளனர்.

    வேலுமணி

    வேலுமணி

    அங்கு, பியூஷ்கோயலை அமைச்சர்கள் சந்தித்து, மாநில வளர்ச்சி திட்டங்களுக்கான நிலுவை நிதியை இருவரும் கேட்டு வலியுறுத்தி உள்ளனர். அப்போது, தேர்தல் தோல்விக்கு அதிமுக காரணமே இல்லை என்றும், முழு ஒத்துழைப்பு தந்து பிரச்சாரம் செய்தோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

    தங்கமணி

    தங்கமணி

    மேலும் ஜல்சக்தி துறை சார்பாக நடந்த குடிநீர் பிரச்சனை தீர்க்கும் கூட்டத்தில் வேலுமணி கலந்து கொண்டு, தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் குறித்து எடுத்துரைத்துள்ளார். மற்றொரு காரணம் சொல்லப்படுகிறது. இதேபோல் தங்கமணியும், மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்கேசிங்கை தமிழகத்தின் மின் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

    தீவிர பிரச்சாரம்

    தீவிர பிரச்சாரம்

    ஆனால் இந்த கூட்டங்களுக்கு பிறகுதான் இரு அமைச்சர்களும், நேற்று மதியம் அமித்ஷாவை சந்தித்து அரை மணி நேரம் பேசியிருக்கிறார்கள். முதலாவதாக, தேர்தல் தோல்விக்கு அதிமுக எந்த விதத்திலும் காரணம் இல்லை, பாஜகவுக்காக தீவிர பிரச்சாரத்தில் அதிமுக ஈடுபட்டது என்று தெரிவித்துள்ளனர்.

    அதிமுக கூட்டம்

    அதிமுக கூட்டம்

    அடுத்ததாக, அதிமுகவில் நிலவும் விவகாரங்கள் குறித்து விளக்கி இருக்கிறார்கள். துணை முதல்வர்தான் என்னென்னமோ குழப்பங்களை செய்து வருகிறாரே தவிர, அதிமுக-பாஜக உறவு நல்ல முறையில்தான் உள்ளது என்றும், இன்று நடக்க உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் பாஜக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    பாஜக ஆதரவு

    பாஜக ஆதரவு

    ஒரு பக்கம், பாஜக தரப்புக்கு ஓபிஎஸ் நெருக்கம் காட்டி வருகிறார். மற்றொரு பக்கம், இரு அமைச்சர்களும் எடப்பாடிக்கு ஆதரவு தரும்படியான கோரிக்கையை முன் வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், எதுவாக இருந்தாலும், இன்று நடக்க உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவின் நிலைப்பாடு தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது!

    English summary
    Sources says that, TN Ministers Thangamani and Velumani met with Amit shah and discussed with Local Politics in AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X