அதிமுகவுக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. பிரதமரை சந்திக்க டெல்லிக்கு பறக்கும் டீம்!
சென்னை: "நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழ்நாடு எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க இருக்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதயப்பூர்வமான நன்றி என்றும் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சட்டசபையில் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "2026-ல் மத்திய அரசு மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநித்துவ உரிமை பாதிக்கப்பட கூடாது என முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றம் செய்யபட்டது.
அதனை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட கட்சிகளை ஒன்றிணைத்து கடந்த கடந்த மார்ச் 3 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை கடுமையாக எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றாமல் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையில் 1971ஆம் ஆண்டு இரு அவைகளில் எந்தெந்த விகிதத்தில் தற்போது இருக்கிறதோ, அதே விகித எண்ணிக்கையில் உயர்த்த அரசியல் சட்டத்தை இயற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியும், நியாயமான உரிமையை மீட்கவும், நியாயமான கோரிக்கைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடந்த 22.3.2025-ல் கூட்டுக்குழு முதல் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேரிலும், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொளி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் தொகுதி மறுவரையறையில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கையை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும், மக்கள் தொகை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய மாநிலங்களை தண்டிக்கப்பட கூடாது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பங்கேற்ற அரசியல் தலைவர்கள் தங்கள் சட்டமன்றங்களில் தொகுதி மறுவரையறை குறித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்ய வேண்டும். மேலும், கூட்டுக் குழு சார்பில் பிரதமரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்றும் இந்த முதல் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் பற்றி தெரிவித்தார்.
மேலும், "தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்" என்ற முழக்கத்தினை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று நமது உரிமைகளை, நம் போல் பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமர் அவர்களைச் சந்திக்கவிருக்கிறோம்." என்றார்.
மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு முன்னெடுத்த கூட்டுக்குழு நடவடிக்கை தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி மறுவரையறை குறித்த நடவடிக்கைக்கு துணை நின்ற அதிமுக உள்ளிட்ட அனைத்துகட்சிகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்." எனத் தெரிவித்தார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications