விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கும் முதல் கட்சி, தமிழக முஸ்லீம் லீக்! திமுகவுக்கு எதிராக முஸ்தபா!
சென்னை: நடிகர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், கட்சியின் முதல் பொதுக்குழு வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது கட்சி உடன் கூட்டணி அமைக்க முதல் கட்சியாக விருப்பம் தெரிவித்து இருக்கிறது தமிழக முஸ்லிம் லீக். திமுக தொடர்ந்து இஸ்லாமியர்களை ஏமாற்றி வரும் நிலையில் பெண்கள் உள்ளிட்ட பலருக்கு விஜய் கட்சியில் பதவி கொடுத்திருப்பதால் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக விளக்கம் அளித்துள்ளார் கட்சியின் தலைவரான முஸ்தபா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தற்போது அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பிப்பதாக கூறிய அவர் விழுப்புரத்தில் நடைபெற்ற முதல் மாநில மாநாடு மூலம் நேரடியாக அரசியலில் குதித்துள்ளார்.

தொடர்ந்து பாஜக திமுகவுக்கு எதிராக தனது அரசியல் பயணம் இருக்கும் என அறிவித்த அவர், தற்போது மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் அந்த கட்சியின் முதல் மாநில பொது குழு நடைபெற இருக்கிறது. இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்திருக்கிறார். மேலும் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் நேரடியாக தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரை சந்தித்த அவர் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் தமிழக முஸ்லிம் லீக் இணையும் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்," திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்களில் திமுக இஸ்லாமியர்களை ஏமாற்றி வருகிறது. இந்த நிலையில் விஜய் கட்சியில் துணை தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இஸ்லாமியர்களை அமர்த்தி இருக்கிறார். குறிப்பாக மாநில மாநாட்டிலேயே ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை மேடையில் அமர வைத்தது இது தான் முதல் முறை. சமூக நீதி கட்சி, சிறுபான்மையினருக்கான கட்சி என சொல்லும் திமுக கூட இதுவரை அவ்வாறு செய்ததில்லை.
மேலும் பாபு என்ற இஸ்லாமியரை மாவட்ட செயலாளர் ஆகவும், ஜாஸ்மின் என்ற இஸ்லாமிய இளம் பெண்ணை மாநில பொறுப்பிலும் நியமித்திருக்கிறார். ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நடத்தும் நோன்பு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் விஜயை சந்திக்க சென்றோம். நிச்சயம் அவர் கலந்து கொள்வேன் என சொல்லியிருக்கிறார்.
இதன் மூலம் எங்களுக்கு மேலும் நம்பிக்கை வந்திருக்கிறது. கட்சியின் முதல் மாநாட்டிலேயே கொள்கை ரீதியாக பாஜக எதிரி என சொல்லி இருப்பதன் மூலம் அவர் நம்பகமானவராக தெரிகிறார். அதன் காரணமாகவே அவருடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் எங்கள் கட்சி இணையும்" எனக் கூறியிருக்கிறார்.
விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டிலேயே கூட்டணி அரசுக்கு தயார் என கூறியிருந்தார். ஆனாலும் பல கட்சிகள் அது தொடர்பாக பேசி வந்த நிலையில் கூட்டணி எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் சிறிய கட்சியாக இருந்தாலும் இஸ்லாமிய கட்சி ஒன்று விஜய்க்கு ஆதரவளித்து இருப்பது கவனிக்க வைத்துள்ளது.
-
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications