Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்திற்கு விலக்கு தேவை” அமித் ஷா முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை என்று தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென் மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய தெற்கு யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் தென் மண்டல கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை வகித்த அமித் ஷாவுக்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பூங்கொத்து கொடுத்தார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதனால் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீட் விலக்கு

நீட் விலக்கு

தொடர்ந்து மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்றும், வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ரயில் சேவை

ரயில் சேவை

அதேபோல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 திராவிட மொழி

திராவிட மொழி


தொடர்ந்து மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. தென்னிந்திய முதலமைச்சர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நமது மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை.

மு.க.ஸ்டாலின் கோரிக்கை

மு.க.ஸ்டாலின் கோரிக்கை

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வோடு அனைத்து பிரச்னைகளையும் தீர்த்திட வேண்டும். அடுத்த தென்மண்டல கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் என்று கோரிக்கை வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+