எங்க "அம்மா" இருக்காங்கடா.. யாராச்சும் மேல கை வைங்க பார்ப்போம்.. பெண்களுக்கு உற்சாகம் தந்த "பட்ரோல்"
அம்மா பேட்ரோல் வாகன சேவையை முதல்வர் இன்று தொடக்கி வைத்தார்
சென்னை: ஒரு பொண்ணு மேலயும் இனி ஒருத்தரும் கை வெச்சிட முடியாது.. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவே அம்மா பேட்ரோல் பிங்க் வண்டி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்து இருக்கிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல வகைகளில் தமிழக அரசு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, 181 இலவசத் தொலைபேசி சேவை, ஒன் ஸ்டாப் சென்டர் போன்ற பிரிவுகளை, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இவைகளை எல்லாம் அந்தந்த மாவட்ட மகளிர் ஸ்டேஷனுடன் இணைத்து செயல்பட்டும் வருகிறது.
அந்த வகையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு பிங்க் நிற ரோந்து வாகனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு இது உருவாக்கப்பட்ட இருக்கிறது. அம்மா பேட்ரோல் என்ற பெயரில் இந்த இனோவா கார்கள் இனிமேல் செயல்பட போகிறது. இதன் முதற்கட்ட 20 பிங்க் வண்டிகளின் சேவையைதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, பெண் போலீசாருக்கு என தனியாக 45 அதிநவீன சொகுசு ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிங்க் வண்டி.. ஜெயலலிதாவை நினைவில் கொள்ளும் வகையில் ''அம்மா பேட்ரோல்'' என்ற பெயரில் அறிமுகம் ஆகி உள்ளது. குழந்தைகளுக்காக 1098 என்ற ஹெல்ப்லைன் எண்ணும், பெண்களுக்காக 1091 என்ற எண்ணும் இந்த வாகனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
குழந்தைகள் பெண்கள் மட்டுமில்லை.. வயசானவர்களுக்கும் இந்த திட்டம் உதவும். பெரிய அளவு கொடூரங்களை நடக்க விடாமல் மட்டுமில்லை.. யாராவது பெண்களை கேலி செய்தாலே போதும்.. அதிரடியாக களத்தில் இறங்கி தடுப்பதுதான் இந்த பிங்க் முக்கிய வேலை. சென்னைக்கு பிறகு மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக இந்த பிங்க் வண்டி வர போகிறது. என்றாலும், பெண், குழந்தைகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் வகையில் எடப்பாடி அரசு எடுத்து வரும் முயற்சிகள் மக்களை கவர்ந்து வருகின்றன.
-
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Jayalalithaa: ஜெயலலிதா வீடு பறிமுதல்.. ரூ.1.60 கோடி சொத்து வரி பாக்கியால் ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications