பிளஸ் 2 ரிசல்ட்.. வீரு கொண்டு எழுந்த விருதுநகர் டாப்..கடைசி ராணிப்பேட்டை
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாவட்டவாரியாக மாணவர்கள் பெற்றுள்ள தேர்ச்சி சதவிகிதத்தை அரசு கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. பிளஸ் 2 பொது தேர்வினை தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற்றதால் இன்றைய தினம் காலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
அதன்படி 8,03,385 தேர்வர்கள் தேர்வு எழுதியதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும்.மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.
மாவட்ட வாரியான தேர்ச்சி விவரம் :
- கன்னியாகுமரி - 97.05%
- திருநெல்வேலி - 96.61%
- தென்காசி - 95.96%
- தூத்துக்குடி - 97.36%
- ராமநாதபுரம் - 96.30%
- விருதுநகர் - 97.85%
- தேனி - 93.17%
- மதுரை - 95.84%
- திண்டுக்கல் - 93.77%
- ஊட்டி - 93.85%
- திருப்பூர் - 97.79%
- கோவை - 97.57%
- ஈரோடு - 96.98%
- சேலம் - 94.22%
- நாமக்கல் - 96.94%
- கிருஷ்ணகிரி - 86.69%
- தர்மபுரி - 92.72%
- புதுக்கோட்டை - 92.81%
- கரூர் - 94.31%
- அரியலூர் - 96.88%
- பெரம்பலூர் - 97.59%
- திருச்சி - 96.02%
- நாகை - 90.68%
- மயிலாடுதுறை - 90.15%
- திருவாரூர் - 91.46%
- தஞ்சாவூர் - 95.18%
- விழுப்புரம் - 90.66%
- கள்ளக்குறிச்சி - 91.06%
- கடலூர் - 92.04%
- திருவண்ணாமலை - 89.80%
- வேலூர் - 89.20%
- திருப்பத்தூர் - 91.13%
- ராணிப்பேட்டை - 87.30%
- காஞ்சிபுரம் - 90.82%
- செங்கல்பட்டு - 92.52%
- திருவள்ளூர் - 92.47%
- சென்னை - 94.14%
- காரைக்கால் - 88.57%
- புதுச்சேரி - 93.45
விருதுநகர் கல்வி மாவட்டம் பல ஆண்டு காலமாகவே முதல் மூன்று இடங்களில் மாறி மாறி பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்து இருந்தது. மேலும், விருதுநகர் 2வது இடத்தையும், ராமநாதபுரம் 3வது இடத்தையும் பிடித்து இருந்தது. 86.69 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்து இருந்தது. இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications