அந்தப் பக்கம் அன்புமணி..இந்தப் பக்கம் திருமா! அரசியல் முட்டு சந்தில் நிற்கும் ராமதாஸ்! பனையூர் தானா?
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் ஏதாவது ஒரு கூட்டணி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், பாமகவில் ராமதாஸ் தரப்பின் நிலைமை மோசமாக இருக்கிறது. அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைப்பது உறுதி ஆகி உள்ளது. திமுக கூட்டணிக்கு பாமகவின் எந்த தரப்பு வந்தாலும் வெளியேறி விடுவோம் என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதனால் வேறு வழி இன்றி தவெக கூட்டணிக்கு செல்வதுதான் ராமதாஸுக்கான கடைசி வாய்ப்பு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. திமுகவை பொருத்தவரை கூட்டணி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டது தான். பத்தாண்டுகளுக்கு மேலாக அந்த கூட்டணிகள் இருக்கும் கட்சிகள் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக சில கட்சிகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. பாமகவில் அன்புமணியும் கூட்டணியில் சேர்வது கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு விட்டது.

தமிழக அரசியல்
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஜனவரி ஒன்பதாம் தேதி தனது கட்சியின் மாநாட்டில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு தரப்பாக செயல்பட்டு வரும் நிறுவனர் ராமதாஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது எழுந்திருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல் அதிமுக பாஜக கூட்டணியில் ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் இடம் பெற்றுவிட்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
பாமக கூட்டணி
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற புத்தாண்டு பொதுக்குழுவில் ஆர்எஸ்எஸ் அடிமை என அன்புமணி தரப்பை கடுமையாக விமர்சித்தது ராமதாஸ் தரப்பு. இதனால் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அந்த கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. பாமக விவகாரங்களில் திமுகவின் தலையீடு இருக்கிறது என சொல்லப்படும் நிலையில், திமுக கூட்டணி ராமதாஸ் செல்வார் என சில தகவல்கள் உலாவின. ஆனால் அதற்கும் ஒரு பெரிய முட்டுக்கட்டை இருக்கிறது.
திருமாவளவன் எச்சரிக்கை
அதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பத்தில் இருந்தே பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் திருமாவளவன். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாமகவின் எந்த தரப்பு வந்தாலும் நாங்கள் இடம்பெற மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்றிவிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு தரப்பை இணைக்க திமுக தலைமை விரும்பாது எனவே சொல்லப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு செல்லும் நிலை ராமதாஸுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தவெக கூட்டணி
ஆனால் தமிழக வெற்றிக் கழக தரப்பும் அன்புமணியை கூட்டணிக்குள் சேர்க்க முயன்று வரும் நிலையில் ராமதாசை சேர்ப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு காலத்தில் அதிமுகவாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும் பாமகவை கூட்டணியில் சேர்க்க தைலாபுரத்திற்கு சென்றது தான் வரலாறு. ஆனால் தற்போது எந்த கூட்டணி வாய்ப்பும் இல்லாமல் முட்டு சந்தில் நிற்கிறார் ராமதாஸ் என விமர்சிக்கின்றனர் அன்புமணி தரப்பினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications