போன எடுத்தா சும்மா நச்சு நச்சுன்ரானுங்க.. தவெகவுக்கு 70 தொகுதிகள்! இன்ஸ்டாவில் இன்ஃப்ளூயன்சர் இம்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் திடீரென பேசப்படும் புதிய 'ட்ரெண்ட் செட்டிங்' முயற்சி தவெக (தமிழக வெற்றி கழகம்) தரப்பில் நடைபெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்களை திமுக ஆதரவாளர்கள் "தற்குறிகள்" என்று அவமதித்து வரும் சூழலிலும், சமூகவலைதளங்களில் அமைதியாகவும், அதே நேரத்தில் திட்டமிட்டு மக்களின் மனநிலையை மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு பின்னால், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், சிடிஆர் நிர்மல் குமார், ஜார் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திமுக, அதிமுக என தமிழகத்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளும் 2026 தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிவிட்டன. ஒரு படி மேலே போய் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க அரசியலின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விஜய்க்கு பின்னடைவாக அமைந்தது. இதை அடுத்து சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக முடங்கி இருந்த விஜய் தற்போது மீண்டும் அரசியல் களத்திற்கு திரும்பி இருக்கிறார்.

Vijay TVK Survey

விஜய் அரசியல்

வரவிருக்கும் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல், கடந்த தேர்தல்களை விட மிகக் கடுமையான அரசியல் போட்டியாக அமைந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த முறை கூட்டணியே வெற்றியை தீர்மானிக்கப் போகிறது என்பதில் அரசியல் வல்லுநர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆதரவு இருக்கிறதோ? இல்லையோ? தங்களை மிகப்பெரிய அரசியல் சக்தியாக மக்கள் மனதில் நிலைநிறுத்த தவெக நிர்வாகிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதிதான் தற்போது விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாக சொல்லப்படும் சர்வே.

விஜய் அரசியல்

தொடக்கத்தில் விஜய்க்கு சுமார் 20% வாக்குகள் கிடைக்கலாம் என எந்த ஆதாரமும் இல்லாமல் சில கணக்குகள் பறந்தன. அதையே தவெக நிர்வாகம் உறுதியாக பிடித்துக்கொண்டு, தற்போது நேரடியாக 40% வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என பேசத் தொடங்கியுள்ளது. இந்த பேச்சை ஆதரிப்பதற்காக பல்வேறு வழிகளில் ஒரு நம்பிக்கையை உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது. அதில் முக்கியமானது, தற்போது வைரலாகும் தவெக சர்வே ரிப்போர்ட் என கூறப்படும் ஆவணம்.

வைரல் ரிப்போர்ட்

செங்கோட்டையன் பனையூர் விஜயம், பின்னர் முன்னாள் எம்பிக்கள்-எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள் என்ற தகவல்கள், இவை அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகும் நிலையில், அந்த ரகசிய சர்வே ரிப்போர்ட் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த சர்வே, இந்த தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தவெக 70 முதல் 80 தொகுதிகளில் முன்னிலை பெறலாம் என்றும் கூறுகிறது.

பெண்கள் வாக்கு

சர்வே தகவல்படி, 70 தொகுதிகளில் தவெக 40% வாக்குகளும், 140 தொகுதிகளில் 25% வாக்குகளும் பெறும் எனவும், பெண்களில் 58% பேரும் இளம் மற்றும் புதிய வாக்காளர்களில் 80% பேரும் தவெகவுக்கு ஆதரவு தருவார்கள் என்றும் பரப்பப்படுகிறது. மேலும் தொகுதிவாரியான கணக்குகளும் பரப்பப்பட்டு வருகின்றன. சோழிங்கநல்லூரில் 51% வாக்குகள், திருவள்ளூரில் 50% வாக்குகள், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 48% வாக்குகள் கூட தவெகவுக்கு செல்லலாம் என கூறப்படுகிறது.

திமுக

தொடக்கத்திலிருந்து திமுகவுடன் நேரடி போட்டி தான் என தவெக உருவாக்கிய பேச்சு மக்கள் மத்தியில் சில அளவுக்கு பேசுபொருளானது. கரூர் அசம்பாவிதம் நடந்திருக்காதிருந்தால் இந்த பிரசாரம் இன்னும் அதிகமாக சென்றிருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காரணம், தவெக தலைமைக்கு பின்னால் செயல்படும் வியூகப் பிரிவு, விஜய்க்காக என்ன செய்ய வேண்டும், மக்கள் மனநிலையை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை கணக்கிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்ஃப்ளூயன்சர்

இந்த சர்வே ரிப்போர்ட்டும் அதற்கான ஒரு பகுதியாகத்தான் பார்க்கப்படுகிறது. அதேசமயம், "திமுக கூட்டணி 48% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 39% வாக்குகளையும், நாதக சுமார் 8% வாக்குகளையும் வைத்திருக்கும் நிலையில், தவெக 40% வாக்குகளை வானத்திலிருந்தா பெறும்?" என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர். இருப்பினும், தற்போது ஒரு சம்பவத்தை அல்லது ஒரு பிரச்சனையை பொதுமக்கள் மீது தாக்கம் ஏற்படும் வகையில் மாற்றுவது எப்படி என்பதை தவெக நன்றாகப் புரிந்துகொண்டுள்ளது.

ட்ரெண்ட் அரசியல்

கரூர் சம்பவத்தையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட விதம் இதற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் திமுக எம்எல்ஏ எழிலனும், "தவெக ஆதரவாளர்களை தற்குறிகள் என்று சொல்லும் விமர்சனத்தைக் குறைக்க வேண்டும்" என்று தன் கட்சியினருக்கு அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது. இது தவெக உருவாக்கும் ட்ரெண்ட் அரசியல் கணக்கில் உண்மையாகவே தாக்கம் ஏற்படுத்தி வருவதாக சிலர் வாதிடுவதையும் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+