நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக திரளும் வழக்கறிஞர்கள்.. நீதிமன்ற வாயில்களில் நாளை ஆர்ப்பாட்டம்!
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை நீதிமன்ற வாயில்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சமூக பிரச்சனைகள், கூடங்குளம் அணு உலை, மனித உரிமை மீறல், காவல் நிலைய மரணங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார். தனது கோரிக்கை தொடர்பான பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார்.

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அடங்கிய அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். தற்போது வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து வாஞ்சிநாதன் ஆஜரானார்.
அப்போது "எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக விமர்சிக்கிறீர்களா? இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா" என வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் திடீரென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.
இந்நிலையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எடுத்துள்ள அவமதிப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகாரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அடிப்படையற்ற இயற்கை நீதிக்கு எதிரான வகையில் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி, நாளை (ஜூலை 28) காலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமுள்ள நீதிமன்ற வாயில்களில் வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications