கொட்டி தீர்க்கும் மழை.. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அர்னாப் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தலைநகர் சென்னை, நீலகிரி, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று மதியம் முதல் இரவு வரை விடிய விடிய மழை கொட்டியது.

மழை பாதிப்பு
அதிகபட்சமாக ராமநாதபுரம் பாம்பனில் 11.4 செ.மீ மழை பெய்துள்ளது. கோவையில் 6.2 செ.மீ, காரைக்காலில் 5.4, புதுச்சேரியில் 4.8 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் அந்தப் பகுதிகள் வெள்ளக்கடாக மாறியுள்ளது. தாழ்வான பகுதிகள் தனித்தீவு போல மாறியுள்ளது. நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மழை காரணமாக பல்வேறு மலை கோயில்கள், அருவிகள், சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. நீர்நிலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காக்களில் (குன்னூர், கோத்தகிரி, உதகை, குந்தா) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவ்யா அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம், சின்ன சேலம் ஆகிய 2 வட்டங்களில் உள்ள 5 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் பத்மஜா உத்தவிட்டுள்ளார்.
இதேபோல தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள 26 பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
