பதிவுத்துறை குட்நியூஸ் தருதா? வில்லங்க சான்றிதழ், சொத்து பத்திரங்கள்.. விரைவில் வருகிறதா அறிவிப்பு
சென்னை: சென்னையில் புயல் புரட்டி எடுத்த நிலையில், பொதுமக்கள் கடுமையான பாதிப்பில் உள்ளனர். இந்நிலையில், தமிழக பத்திரப்பதிவு துறை, முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னையை உலுக்கி எடுத்துவிட்டு போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை செய்து வருகிறார்கள்.. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்..
படகு போக்குவரத்து: இதைத்தவிர, வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னையின் ஏகப்பட்ட குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.. இதனால், அவர்களால் வெளியே வரமுடியாத நிலைமை உள்ளது.. சென்னையின் புறநகர்ப்பகுதிகளின் பெரும்பாலான தெருக்களில், படகு போக்குவரத்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது..
வழக்கமாக தாழ்வான பகுதிகளில்தான் மழைநீர் சூழ்ந்துவிடும். ஆனால், இந்த முறை, மேடு பகுதிகளும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு முகாம்கள்: அதிலும் தரைத்தளம் பகுதிகளில் குடியிருப்பவர்கள் வீடுகளில் எல்லாம் நீர் புகுந்துவிட்டதால், அவர்கள் மொட்டை மாடிகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், பெரும்பாலான வீடுகளில் மின்சார சாதனங்கள், துணிகள், புத்தகங்கள், ஆவணங்கள் பாழாகி உள்ளன. இதில், சொத்து பத்திரங்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு நனைந்து சேதமடைந்துள்ளன.. இதனால், கடுமையாக அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "தமிழகத்தில், 2015ல் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, சில இடங்களில் சார் - பதிவாளர் அலுவலகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன... இதனால், வீடுகளில் மக்கள் வைத்திருந்த சொத்து பத்திரங்களும் பாழாகிவிட்டன.. அந்த நேரத்தில், வில்லங்க சான்றிதழ் மற்றும் அடையாள சான்றுகள் அடிப்படையில், சான்றிடப்பட்ட பிரதி ஆவணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
ஆவணங்கள்: இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அந்த முகாம்கள் வாயிலாக, மாற்று பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதே நடைமுறையை இப்போதும் கடைப்பிடிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்றார்.
இதையடுத்து, விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, சொத்து பத்திரங்களின் நகல்கள், வில்லங்க சான்றிதழ், அடையாள சான்றிதழ்கள் போன்றவற்றின் பிரதி ஆவணங்கள் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications