தமிழகத்தில் மேலும் 4,549 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ்- 69 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 4,549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 69 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்த இன்று ஒரேநாளில் 4,549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிகை 1,56,369 ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5,106 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 1,157 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 1712 இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் தற்போது 15038 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரையில் இன்று 267 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் மதுரையில் 679 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதால் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மதுரையில் தற்போதைய நிலையில் 2929 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications