சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாக்டோ ஜியோவுடன் தலைமை செயலக ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து ஸ்டிரைக்.. அரசு பணிகள் முடங்கும் அபாயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Jactto-Geo Protest: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்- வீடியோ

    சென்னை: ஜாக்டோ ஜியோவுடன் தலைமை செயலக ஊழியர்களும் பணிகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

    TN Secretariat workers also join in the strike with Jacto Geo

    இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    7-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் கல்வியும் அரசு பணிகளும் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. இன்றைக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர் சங்கத்தினர் அலுவலகப் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் அரசு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Secretariat Workers also involve in Strike join hands with Jacto Geo.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X