Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் அடிப்படையே தவறு.. கரூர் கேஸை சிபிஐ விசாரிக்க கூடாது! தமிழக அரசு திடீரென உச்ச நீதிமன்றத்தில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் தவெக வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள், வழக்கின் விசாரணையை மீண்டும் மாநிலக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்புவதைக் காட்டுகிறது.

1. முதலில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய அக்டோபர் 13, 2025 தேதியிட்ட உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை ரத்து செய்ய தமிழக அரசு கோரியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அமைந்த சிறப்பு புலனாய்வுக் குழுவே (எஸ்ஐடி) மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

TN Seeks Withdrawal of CBI Probe Order and Revival of Jagadeesan Inquiry Commission

2. அடுத்து, செப்டம்பர் 28, 2025 அன்று அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையத்தின் இடைநீக்கத்தை நீக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கெனவே சம்பவத்தை விசாரித்து வந்த இவ்வாணையம், தனது பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே மாநில அரசின் விருப்பம்.

3. மூன்றாவதாக, முதல் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், முந்தைய உத்தரவின் பத்தி 33-ல் உள்ள "சொந்த மாநிலத்தைச் சேராதவர்" என்ற சொல்லை நீக்கக் கோரப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவிலும் மாற்றங்கள் செய்ய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

TN Seeks Withdrawal of CBI Probe Order and Revival of Jagadeesan Inquiry Commission

4. இறுதியாக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்திடம், சிறப்பு அனுமதி மனுவை (SLP) தள்ளுபடி செய்யக் கோரியுள்ளது. அது விசாரணைக்கு உகந்ததல்ல, தவறான காரணங்களின் அடிப்படையிலானது எனக் குறிப்பிட்டது. ஆரம்ப எஸ்ஐடி விசாரணையும் ஜெகதீசன் விசாரணை ஆணையமும் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே மாநிலத்தின் நிலைப்பாடு என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

கரூர் வழக்கு சிபிஐ விசாரணை

ஏற்கனவே கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் தவெகவின் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோரிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

முக்கியமாக கடந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்டோரிடம் இரண்டு நாட்கள் சுமார் 18 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் நடத்தினர்.

சிபிஐ கேட்டது என்ன?

சிபிஐ விசாரணையில் பின் வரும் கேள்விகள் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கரூர் கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்கள் எந்தெந்த மாவட்டங்களிலிருந்து வந்தனர்? சென்னையிலிருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்த விஜயின் பயணத்திட்டத்தை வகுத்தது யார்? செப்டம்பர் 27 அன்று மதியம் 3 மணிக்கு கூட்டம் நடக்க திட்டமிடப்பட்டிருந்தும், நண்பகல் 12 மணிக்கு பேசுவதாக அறிவிக்கச் சொன்னது யார்?

விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்தபோது, சரியான தகவல் அவரிடம் தெரிவிக்கப்படவில்லையா? கூட்டத்தில் மயக்கமடைந்தவர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட பிறகும் விஜய் ஏன் தனது பேச்சைத் தொடர்ந்தார்? கரூர் கூட்டத்தை கருதி, வேறு இடத்தில் கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்களா?

காவல்துறை அறிவுறுத்தல்களை மீறி, கூட்ட நெரிசலுக்குள் பேருந்தை நகர்த்த உத்தரவிட்டது யார்? நண்பகல் 12 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு, விஜய் இரவு 7 மணிக்கு வர காரணம் என்ன? தொண்டர்களின் வருகையையும், மற்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் யார்?

கூட்டத்தை பெரியதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக இந்த தாமதம் திட்டமிட்டதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. சிபிஐ விசாரணையின்போது, நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த அதே பதில்களை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையாக விசாரித்த சிபிஐ

கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது. தவெக தரப்பு எதிர்பார்த்ததை விட.. இதில் சிபிஐ கடுமை காட்டி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் வழக்கில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இதற்கு சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் சிபிஐ கடைபிடிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐ வசம் போனால்.. வழக்கு அப்படியே அமுங்கிவிடும்.. பொறுமையாகவே நகரும் என்று சிலர் வாதங்களை வைத்தனர். ஆனால் எதிர்பார்க்காத வண்ணம்.. இந்த முறை சிபிஐ மிக "சீரியஸ்" முறையை இந்த வழக்கில் கடைப்பிடித்து வருகிறது.

அஜய் ரஸ்தோகி

ஏற்கனவே சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த குழுவிடம் கரூர் வழக்கின் முதல் கட்ட ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி இந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்வார். கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது இவரின் பதில் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்படும்.

முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

தமிழக அரசு மனு

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் தவெக வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+