உதயநிதிக்கு ரொம்ப நக்கல்.. ஹாக்கி பஞ்சாயத்து! கேள்வி எழுப்பிய பாஜக நயினாரிடமே ரூ.3 கோடி கேட்கிறாரே
சென்னை: பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப் கொண்டு செல்லப்படும் நிலையில் புதிய ஹாக்கி டர்ஃப் கேட்ட பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நக்கலாக பதிலளித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திர தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், பகிரப்பட்டு இருந்த படத்தில் ஒரு கண்டெய்னருக்கு கிரேன் இருப்பதை போன்ற காட்சி இருந்தது.

அதில் அவர், "மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு! பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப் (Hockey turf) அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதை அமைப்பதற்கான செலவே மிகவும் அதிகம். எனவே புதிய ஹாக்கி டர்ஃப் (Hockey Turf) அனுப்பி வைத்து அதனை அமைக்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனை ரீடுவீட் செய்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம், சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது.
இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து வருகிறது. சர்வதேச அளவிலான இப்போட்டிக்காக புதிய Hockey Turf-ஐ அமைக்கவுள்ளோம். மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட Turf, தேசிய அளவிலான போட்டிகள் & பயிற்சிக்காக இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது.
அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம்,
— Udhay (@Udhaystalin) July 15, 2023
சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை கழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து… https://t.co/Xt7RJQLXn5
ஆகவே, அந்த Hockey Turf வேண்டுமென்று தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர். விளையாட்டு வீரர்கள் அதிகம் நிரம்பிய பாளையங்கோட்டை பகுதியிலிருந்தும் அத்தகைய கோரிக்கை வந்தது. எனவே, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த Hockey Turf-ஐ வழங்கினோம்.
புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலுருந்து அனுப்பப்பட்ட Hockey Turf-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அதே நேரத்தில், பாளையங்கோட்டையில் புதிய Turf அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும். அண்ணன் நாகேந்திரன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம். நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications