இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது.. மாநில கல்வி கொள்கையில் அறிவிப்பு!
சென்னை: 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்படும் என 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்து. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது.

அந்த குழு 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்தது. இதில், இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட வேண்டும் என்றும், 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என என்றும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நியைில் மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆம் வகுப்பு தடையற்ற கல்வி என்பதை உறுதி செய்யப்படும். ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து தேர்ச்சியை முடிவு செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததற்கு, தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மாநில கல்வி கொள்கை வெளியிடப்பட்டுள்ளதால் நடப்பு ஆண்டு முதலே 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications