TRB: ரூ.115700 சம்பளம்.. 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் மெகா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக நிரப்பப்பட உள்ளது. தகுதி உள்ள ஆசிரியர்கள் போட்டித்தேர்வுக்கு நவம்பர் 1ம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழகத்தில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 7-ம் தேதி நடக்கிறது.

TN teacher recruitment board announces 2,222 graduate teacher posts exam to be held on January 7

இந்த தேர்வில் பங்கேற்க வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் https://www.trb.tn.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ந்தேதி ஆகும். தமிழுக்கு 371 காலி பணியிடங்களும், ஆங்கிலத்துக்கு 214 பணியிடங்களும், கணிதத்துக்கு 200 பணியிடங்களும், இயற்பியலுக்கு 274 பணியிடங்களும், வேதியியலுக்கு 273 பணியிடங்களும், வரலாறுக்கு 346 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி இருக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் எவ்வளவு: 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் குறித்தும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ரூ.36400-115700 (லெவல் 16) சம்பளம் கிடைக்கும் .

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான தேதி: 25.10.2023

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023க்கு என்று முதல் விண்ணப்பிக்கலாம்: 01.11.2023

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2023

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023 (ஓஎம்ஆர் அடிப்படையில் தேர்வு) நடைபெறும் நாள்: 07.04.2024

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2023 காலியிடங்கள் விவரம்: 2222

பள்ளி கல்வித்துறையில் காலியிடங்கள்: 2171 (இதில் 171 எஸ்டி பணியிடங்கள்)

பிற்பற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் உள்ள காலியிடங்கள்: 23

ஆதிதிராவிடர் நலத்துறை காலியிடங்கள்: 16

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை காலியிடங்கள்: 12

தமிழ் மீடியத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது பட்டம் அல்லது முதுகலை பட்டம் வரை எதுவரை தமிழ் வழியில் படித்துள்ளார்களோ அதனை குறிப்பிட்டு சான்றிதழ் பெற வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள 2222 இடங்களில் 20 சதவீதம், அதாவது 444 இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+