சென்னையை ஒட்டி ‘பச்சை’.. விட்டு விட்டு மழை வெளுக்கும்! ஆனா அந்த மாதிரி இல்லப்பா.. வெதர்மேன் அப்டேட்!
சென்னை: சென்னை வானிலை நிலவரம் குறித்த வரைபடத்தை வெளியிட்டு, "மழை மேகங்கள் உள்ளே நகர்கின்றன. விட்டு விட்டு மழை தொடரும்." எனக் கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் நிலவி வந்தது. கடந்த 15 ஆண்டுகளில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் சென்னையில் இந்த ஆண்டுதான் அதிகமாக வெயில் சுட்டெரித்துள்ளது.

வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென வானிலை அப்படியே கூலாக மாறியுள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சென்னையின் அனேக இடங்களில் மழை பெய்தது. நள்ளிரவு தாண்டி, இடி, மின்னலுடன் மழை தொடர்ந்தது. விடிய விடிய பெய்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீர் தேங்கியது.
சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. முன்னதாக 1996ஆம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக அடையாறு உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் 150 மி.மீ வரை மழை கொட்டித் தீர்த்தது.
1991, 1996 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 2023ல் ஜூன் மாதத்திலேயே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
இன்றும் வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Rain clouds moving in. Not like yesterday night one. On and off rains to continue pic.twitter.com/QM4R5OrXNy
— Tamil Nadu Weatherman (@praddy06) June 19, 2023
இந்நிலையில், வானிலை தொடர்பாக தொடர்ச்சியான அப்டேட்களை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னையில் மழை தொடர்பாக ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
நேற்று இரவு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள ட்வீட்டில் வானிலை வரைபடத்தை பகிர்ந்து, "மழை மேகங்கள் உள்ளே நகர்கின்றன. நேற்று (ஜூன் 18 இரவு) இரவு போல் இல்லை. விட்டு விட்டு மழை தொடரும்." எனக் கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications