2022 ஆண்டின் சென்னையில் அதிக வெப்பமான நாள் இன்று.. சதமடித்த வெப்பநிலை.. வெதர்மேன் ட்வீட்
சென்னை: சென்னையில் பல இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டின் வெப்பமான நாள் இன்று என தமிழ்நாடு வெதர்மேன பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை என்பது மாறியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மழையும் குளிரும் மாறி மாறி இருந்தது. பொதுவாக மார்கழி மாத பனி பொங்கலுக்கு பிறகு இருக்காது என்பார்கள். ஆனால் கடந்த ஆண்டு நிலையே மாறியிருந்தது.
கோடைக்காலம் மார்ச், ஏப்ரல் மே மாதம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே அனல் கக்கி வந்தது. தற்போது மார்ச் மாதம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிக வெப்பம் இருந்து வருகிறது.

ஜூஸ் கடைகள்
இதனால் ஆங்காங்கே இளநீர், தர்ப்பூசணி, ஜூஸ் விற்பனை ஜரூராக உள்ளது. பலர் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த நிலையில் வெப்பம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை 38 டிகிரி சென்டிகிரேட்டை தாண்டியது. மதுரையில் 39 டிகிரி செல்சியஸாக உள்ளது. திருச்சியில் மழை பெய்த பிறகு அங்கு வெப்பநிலை 33 டிகிரியாக உள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்
இன்று மதுரையின் உட்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, கொடைக்கானல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு அதிக வெப்பம்
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications