சென்னையில் மழை விட்டிருச்சி.. ஆனால் 2ஆவது சம்பவம் நெருங்கிடுச்சி.. வெதர்மேன் பரபரப்பு போஸ்ட்!
சென்னை: சென்னையில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னை 200 மி.மீ. மழையை பெற்றுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் மழையானது சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிட்டது. ஒரே வாரத்திற்குள்ளாக 2ஆவது முறையாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையின் உள்பகுதியில் மழை தொடரும், அதன் பிறகு மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். வரும் வாரத்தில் 2ஆவது சம்பவம் இருக்கிறது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை நின்றுவிட்டது. ஆனால் காற்று மட்டும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் இருக்கும். ஒரே வாரத்தில் 2 -ஆவது சம்பவம் என்பதை வரும் 13 ஆம் தேதி அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அடர்ந்த மேகங்கள்
பழவேற்காடு- பொன்னேரி பகுதியில் மிக அடர்ந்த மேகக்கூட்டங்கள் காணப்படுகின்றன. அநேகமாக இந்த இடத்தில் மிக அதிக கனமழை பெய்யும். வடசென்னைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மில்லி மீட்டரில்
இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மழையின் அளவு மி.மீ.ரில் எம்ஆர்சி நகரில் 61, நுங்கம்பாக்கத்தில் 60, தரமணியில் 59, வில்லிவாக்கத்தில் 40, மீனம்பாக்கத்தில் 35, சோளிங்கநல்லூரில் 25, வானகரத்தில் 25, மேற்கு தாம்பரத்தில் 19 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 200 மி.மீ. மழையை தாண்டியுள்ளது.

ஒரு வாரம்
கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு ஒரு வாரத்திற்குள்ளாக மீண்டும் சென்னையில் கனமழை பெய்துள்ளது. தற்போது மீண்டெழும் நேரமாகும். 200 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் சென்னை நகரின் மழை பொழிவு அச்சுறுத்தலாக உள்ளது. நுங்கம்பாக்கத்தில் கடந்த நவம்பர் முதல் இன்று வரை 700 மி.மீ. மழை பதிவாகுள்ளது. இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தின் படி, 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முழுவதுவமே 1088 மி.மீ.தான் பெய்தது.

நவம்பர் மாதம்
வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப்பெருக்கின் போது 1101 மி.மீ. மழை பெய்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு 1078 மி.மீ.யும் 2015 ஆம் ஆண்டு 1049 மி.மீ. மழையும் 2021 ஆம் ஆண்டு நவம்பரில் இன்று (நவ 11) மதியம் 1.30 மணி வரை 709 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மாதம் முடிய இன்னும் 19 நாட்கள் உள்ளன. கடந்த 200 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே 1000 மி.மீ. மழை அளவை சென்னை நுங்கம்பாக்கம் தாண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் கடந்த கால வரலாற்றுகளை நுங்கம்பாக்கம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications