அபாய கட்டத்தை தாண்டிவிட்டோம்.. சென்னைக்கிருந்த ஆபத்து விலகியது.. குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்!
சென்னை: சென்னையில் மோசமான சூழல் என்பது முடிவுக்கு வந்தது. இனி ஆங்காங்கே எப்போதாவது மழை பெய்யும். காற்றழுத்தம் கரையை கடக்கும் வரை காற்று வேகமாக வீசும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் நல்லதொரு தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் 10-ஆம் தேதி அல்லது 11-ஆம் தேதி மிக மோசமான நிகழ்வு ஏற்படுவதாக கடந்த 9-ஆம் தேதி வெளியிட்ட போஸ்ட்டில் வெதர்மேன் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், 10 ஆம் தேதி நண்பகலோ அல்லது இரவோ சென்னையில் மழை தொடங்கும்.

இன்றைய தினம்
அது இடைவிடாமல் 11 ஆம் தேதி அதாவது இன்றைய தினம் மதியம் வரை 24 மணி நேரம் பெய்யும் என்றும் 11 ஆம் தேதி மாலையிலிருந்தோ அல்லது இரவிலிருந்தோ மழை குறையும் என்றோ தெரிவித்திருந்தார். சுருக்கமாக சொல்ல போனால் 10 ஆம் தேதி நண்பகலில் இருந்து 11 ஆம் தேதி மாலை வரை கடலூர் டூ சென்னை வரை தீவிர கண்காணிப்பு அவசியம் என தெரிவித்திருந்தார்.

சார்ஜ்
அது போல் நேற்று அவர் பதிவிட்ட போஸ்ட்டிலும் அலுவலகத்திற்கு சென்றவர்கள் விரைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் செல்போன், டார்ச் லைட், பவர் பேங்க், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் போட்டுக் கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார். நேற்று இரவும் அவர் போட்ட பதிவில் சென்னைக்கு அபாயம் இருப்பதை போன்றும் தான் கணித்த வானிலை நடந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
Recommended Video

நல்ல செய்தி
இந்த நிலையில் தற்போதைய பதிவில் சென்னைக்கு அவர் நல்ல செய்தியை சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சென்னைக்கு இருந்த மோசமான சூழல் முடிந்தது. இனி எப்போதாவது மழை பெய்யும். இன்று மாலை வடசென்னைக்கும்- ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே காற்றழுத்தம் கரையை கடக்கும் வரை காற்று வீசும்.

காஞ்சிபுரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 150 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சில இடங்களில் 200 மி.மீ.ருக்கு மேல் அதிகரித்துள்ளது. இன்று நீண்ட பிரேக் எடுத்து மழை விட்டு விட்டு பெய்யும். அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசும் என தெரிவித்துள்ளார். காற்றழுத்தம் பார்ப்பதற்கு வலுவிழந்தது போல் தெரிகிறது, இதனால் ஆபத்து விலகியது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications