ப்பா.. சூப்பர் பிட்ச்.. செம என்டர்டெய்மென்ட் இருக்கு.. வாண வேடிக்கையை ரசிக்க நீங்க ரெடியா???

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானம் டி20 போட்டிக்கு ஏற்ற வகையில் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொறுப்பாளர் கூறினார்.

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா எந்தவித ஆர்பரிப்புமின்றி அமைதியாக தொடங்கியுள்ளது.

கோலியின் கவர் டிரைவ்

கோலியின் கவர் டிரைவ்

கொரோனாவின் பேயாட்டம் காரணமாக தல தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், கிங் கோலியின் கவர் டிரைவ், ஹிட்மேன் ரோஹித்தின் அழகான ஃபுல் ஷாட், பாண்ட்யாவின் ருத்ரதாண்டவம் ஆகியவற்றை இந்த முறை ரசிகர்கள் நேரில் கண்டு ரசிக்க முடியாது.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இந்த முறை விதிகளின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சேப்பாக்கத்தில் விளையாட முடியாது என்பதால் டி.வி.யிலாவது சேப்பாக்கத்தில் மஞ்சள் படையினரின் தரிசனத்தை பார்க்கலாம் என்றிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த விஷயத்தில் நமக்கு ஏமாற்றம் கிடைத்திருந்தாலும், கடந்த ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட்டுக்கு பேருதவி செய்து வரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடு கண்டு நாம் பெருமை கொள்ள வேண்டும்.

சென்னையை தேர்வு செய்த பிசிசிஐ

சென்னையை தேர்வு செய்த பிசிசிஐ

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் புகுந்து விளையாடிய கொரோனா, கிரிக்கெட் வீரர்களை வீட்டிலேயே முடக்கி வைத்தது. கிரிக்கெட் மைதானங்களும் பல மாதங்கள் ஓய்வெடுத்தன. ஆண்டு இறுதியில் கொரோனா கொஞ்சம் ஓய்வெடுத்த நிலையில் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. பெரிய, பெரிய மைதானங்கள் நிறைந்த கொல்கத்தா, மும்பையில் கொரோனா பிசியாக வலம் வர, கொரோனா அடங்கி போயிருந்த சென்னையை கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்தது பிசிசிஐ.

வெற்றிகரமாக நடந்த இங்கிலாந்து தொடர்

வெற்றிகரமாக நடந்த இங்கிலாந்து தொடர்

பல மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் அதுவும் நம்ம சென்னையில் இந்தியாவும்-இங்கிலாந்தும் டெஸ்ட் போட்டியில் மோதின. 4 டெஸ்ட்டுகளில் முதல் 2 டெஸ்ட் சென்னையில்தான் நடந்தது. கொரோனா லேசாக வாலாட்டிய அந்த வேளையில் இரு நாட்டு வீரர்களின் தனிமை, அவர்கள் தங்குவதற்கு வசதி என அனைத்தையும் சிறப்பாக செய்து 2 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்து கொடுத்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

தொற்று தடுப்பு ஏற்பாடுகள்

தொற்று தடுப்பு ஏற்பாடுகள்

இந்த நம்பிக்கையில்தான் தற்போது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் 10 போட்டிகளை சென்னையில் நடத்த ஒப்புதல் அளித்துள்ளது பிசிசிஐ. இங்கிலாந்து தொடரின்போது அல்லாமல் தற்போது சென்னையில் மீண்டும் கொரோனா விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் அதனை சவாலாக ஏற்றுக் கொண்டு பாதுகாப்பு மற்றும் தொற்று தடுப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.

பிட்ச் எப்படி?

பிட்ச் எப்படி?

''தலைப்பு வேறு ஒன்றை போட்டுவிட்டு நீ எங்கெங்கேயோ போகிறாய்'' என கூறுகிறீர்களா? சரி.. விஷயத்துக்கு வருகிறேன். சேப்பாக்கம் எப்போதும் ஸ்பின்னர்களுக்கு சொர்க்கபுரியான மைதானமாகும். இங்கிலாந்து தொடரின்போது முதல் டெஸ்ட்டில் எந்தவித சலனமுமின்றி இந்திய ரசிகர்களுக்கு தோல்வியை பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த சேப்பாக்கம், 2-வது டெஸ்ட்டில் இந்திய ஸ்பின்னர்களின் தோள் மீது கைபோட்டு வெற்றியை தூக்கி கொடுத்தது.

கருப்பு மண் பிட்ச்

கருப்பு மண் பிட்ச்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் நடுப்பகுதியில் மொத்தம் 8 பிட்ச்கள் உள்ளன. இதில் களிமண் உள்ளடக்கம் அதிகம் உள்ள கருப்பு மண் பிட்ச், சிவப்பு மண் உள்ளடக்கம் கொண்ட பிட்ச்கள் உள்ளன. ஆனாலும் சிவப்பு மண் உள்ளடக்கம் கொண்ட பிட்ச்களே அதிகம் அங்கம் வகிக்கின்றன. தற்போது இங்கு நடைபெற உள்ள 10 போட்டிகளுக்கும் களிமண் உள்ளடக்கம் அதிகம் உள்ள கருப்பு மண் பிட்ச்தான் பயன்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.

ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்த கருப்பு மண் பிட்ச்தான் பயன்படுத்தப்பட்டது. ஐ.பி.எல். போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்டுள்ள கருப்பு மண் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதமாக இருக்கும். அதே வேளையில் பந்துகள் ஆகாயம் நோக்கி சிக்சருக்கு பறக்கும் நிலையில் பேட்டிங்குக்கும் கைகொடுக்கும். மொத்தத்தில் டி20 போட்டிக்கு ஏற்ற வகையில் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொறுப்பாளர் திடமாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+